செவ்வாய், 12 ஜனவரி, 2021

இலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை! எல்லே குணவங்ச தேரர்


பெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா? என எண்ணத் தோன்றுகின்றது என எல்லே குணவங்ச  தேரர் குறிப்பிட்டார். 

'கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியைப் பாதுகாக்கும் தேசிய திட்டம்' எனும் பெயரில் திட்டமொன்றை நிறுவுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தேரர்

இவ்வாறு தெரிவித்தார். 

நானும் கூட தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தது ஏன் என எண்ணத் தோன்றுகின்றது. இந்த அரசாங்கம் மணியைக் கூட அடிக்காமல் ஏல விற்பனை செய்து வருகின்றது. இந்த நாட்டிலுள்ள ஓர் அங்குல நிலத்தைக் கூட விற்பனை செய்வதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று எச்சரிக்கை விடுத்த தேரர்,  இப்போது இவர்கள் ஆட்சி செய்தது போதும். புதியவர்களுக்கு ஆட்சியை வழங்குவத்ற்குத் தயாராக வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக