வியாழன், 10 டிசம்பர், 2020

கொரோனாவினால் இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்குப் பொருத்தமான நிலங்களை ஆராயுமாறு பிரதமர் பணிப்பு!


 பிரதமரின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு

கொவிட் - 19 வைரஸ் காரணமாக இறப்பவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கு முடியுமா? என்பதை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையே விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று (10.12.2020) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

கொவிட் - 19 வைரஸ் காரணமாக இறப்பவர்களின் உடலங்களைப் புதைப்பது தொடர்பில் சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப, அதிக நிலக்கீழ் மட்டத்திலிருந்து நீர்வரக்கூடிய மிகவும் வரண்ட நிலப்பகுதியொன்றை தேர்ந்தடெுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தௌிவுறுத்தினார்.

தற்போது இந்த வைரஸினால் இறப்பவர்களின் உடலுடன் இந்த வைரஸானது 36 நாட்கள் தொடர்ந்து இருக்கின்றன என சுகாதார வல்லுநர்கள் பிரதமருக்குத் தௌிவுறுத்தினர்..

சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய விடயங்களைக் கருத்திற்கொள்ளாது இனங்கள் மற்றும் மதங்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்கள் எடுக்கமுடியாது எனத் தௌிவுபடுத்திய பிரதமர், சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அனைத்து இனங்களுக்கும் தேவைப்பாடானதாகும் எனவும் குறிப்பிட்டார். 

அதனால் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அக்கூட்டத்தி்ல் கலந்து கொண்ட அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் கேட்டுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னியாரச்சி, ரோஹித்த அபேகுணவர்த்தன, வாசுதேவ நானாயக்கார உட்பட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், சுகாதார அமைச்சின் செயலாளர்    எஸ்.எச். முணசிங்க உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 


ரொஹான் வெலிவிட்ட.

அமைச்சின் ஊடகச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக