திங்கள், 14 டிசம்பர், 2020

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு ஏற்பவே, மாலைதீவில் நல்லடக்கம்....?

 


கொரோனா தொற்றின் காரணமாக இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடலங்களை மாலை தீவில் நல்லடக்கம் செய்வதற்கு அந்நாடு விருப்பினைத் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு ஏற்பவே அந்நாடு இறந்த முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கம் செய்ய விருப்பினைத் தெரிவித்துள்ளது. 

மாலைதீவு வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில், இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அவர்களின்

விசேட வேண்டுகோளுக்கு ஏற்ப, இலங்கையரான முஸ்லிம்கள் கொரோனாவினால் இறப்பெய்தினால் அவர்களின் உடலங்களை இஸ்லாமிய மத அநுட்டான முறைப்படி மாலைதீவில் நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மாலைதீவு ஜனாபதி இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டு அரச தரப்பினரின் கருத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு ஆவன செய்துவருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக