வியாழன், 10 டிசம்பர், 2020

கராப்பிட்டி வைத்தியசாலையில் மூடப்பட்டது ஒரு வார்ட்

 

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது வார்ட்டை மூடுவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வார்ட்டில் ஒரு வாரகாலமாக பெண்ணொருவர் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், குறித்த பெண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்ததும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர்

தெரிவித்தார். 

அங்கு பணியாற்றிய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களில் ஒருபகுதியினரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன்,  கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும் ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக