வியாழன், 10 டிசம்பர், 2020

வெலிகமையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்

மாத்தறை மாவட்டத்தின்  வெலிகம சுகாதார பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 

கல்பொக்கை மற்றும் புதியதெரு எனும் இரு கிராமங்களுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே குறிப்பிட்டார். 

குறித்த கிராமங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் 18 பேர் இனங்காணப்பட்டுள்ளமையினாலேயே இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

நோய்த் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக