திங்கள், 14 டிசம்பர், 2020

இலண்டனில் 24ம் திகதி நடைபெறவுள்ள ”அடையாள மக்கள் போராட்டம்” தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் !


கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்தல் அவசியம்!

கொவிட் கட்டுப்பாட்டு சூழல் காரணமாகவும் , சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியத்தின் காரணமாகவும் , ஒழுங்குமுறையின் முக்கியத்துவம் கருதியும் சில நடைமுறை விதிகளை கடைப்பிடிப்பது அவசியமாகின்றது.
இந்த நாள் நிகழ்வு, மூன்று தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
01. இலங்கை தூதுவராலயத்தை ஊடறுத்த கண்டன வாகனப் பேரணி
02. இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பான கண்டன எதிர்ப்பு போராட்டமும் , பொதுக் கூட்டமும்
03. கலந்து கொள்ள முடியாதவர்கள், தாம் வாழும் பிரதேசத்தில் தமது அடையாள எதிர்ப்பினை வெளிப்படுத்தல் .

01.* இலங்கை தூதுவராலயத்தை ஊடறுத்த கண்டன வாகனப் பேரணி

* கொவிட் விதிகளை கடைப்பிடித்து தனியாகவும், குடும்பமாகவும், நண்பர்களுடனும் வாகனங்களில் வருவோர், அனைவரும் இதில் கலந்து கொள்ள முடியும்.
* பெயர், வாகன இலக்கம், வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை என்பவற்றை மின்னஞ்சல், தொலைபேசி வழியாக எமக்கு அறியத் தரலாம். ( ஒழுங்கு படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்).
* வீட்டிலிருந்து வெளிக்கிடும் போதே , வாகனங்களில் போஸ்டர், பாதாகைகளை ஒட்டிக் கொண்டு வரலாம்.( உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால், போஸ்டர், பதாகை பிரதிகளை அனுப்பித் தருவோம். )
00000
02. இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பான கண்டன எதிர்ப்பு போராட்டமும் , பொதுக் கூட்டமும்

கொவிட் சட்டவிதிகளுக்கு அமைவாக , இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன் நடைபெறவுள்ள போராட்டத்தில் சமூக இடைவெளியைப் பேணி, ஆகக் கூடியது 60 நபர்களே விதிகளுக்கு அமைவாக கலந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆகவே, இதில் கலந்து கொள்ள முன்வருவோர் முன் பதிவு செய்வது அவசியத்திலும் அவசியம், மின்னஞ்சல், தொலைபேசி வழியாக - தமது பெயர், வாழும் பிரதேசம், தொலைபேசி எண் ஆகியவற்றை எமக்கு அனுப்பி, பதிவை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

03. கலந்து கொள்ள முடியாதவர்கள், தாம் வாழும் பிரதேசத்தில் தமது அடையாள எதிர்ப்பினை வெளிப்படுத்தல்

கொவிட் நிலைமையின் காரணமாக , இலங்கை தூதரகத்திற்கு முன்னான போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில், தனியாகவும் , கூட்டாகவும் - தமது அடையாள எதிர்ப்பினை தெரிவிக்கலாம்.
டிசம்பர் 24 , 25 (வியாழன், வெள்ளி ) தினங்களை , வெளி நாடுகளில் வாழும் மக்கள், அடையாள எதிர்ப்புத் தினமாக கடைப்பிடிக்க கோரியுள்ளோம்!
இதற்கு தயாராக இருக்கும் அமைப்புகள், நண்பர்கள், குடும்ப வட்டங்கள், தனி நபர்கள் எம்மைத் தொடர்பு கொண்டால் , போஸ்டர், பாதாகைகள், பிரசுரங்களை அனுப்பித் தருவோம்!
00000
இந்த விடயத்தினை அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சினையாகவும், அடிப்படை உரிமை, மனித உரிமை மீறலாகவும் எமது அமைப்பு பார்ப்பதால் , இந்தப் போராட்டத்தினை அரசியல் ரீதியாவே நாம் ஒழுங்கமைத்துள்ளோம். இது தனி நபர்களைத் தாண்டி, வெகுஜன மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல், சமூக பணியாகும்.
தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்கள் பங்குபற்றும் பல்லினத்தன்மையை இதில் பிரதிபலிக்கிறோம். ஒடுக்கப்படும் அந்த மக்களிடமும் இதில் கலந்து கொள்ளுமாறும், இந்த போராட்டத்திற்கு தமது ஒருமைப்பாட்டை வழங்குமாறும் கேட்டிருக்கிறோம்!
பிரித்தானியாவில் உள்ள ஒடுக்கப்படும் மக்களின் சார்பில் அக்கறை கொண்ட இடதுசாரி அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்கள், தனி நபர்களிடம் தமது ஒருமைப்பாட்டை தருமாறு கோரியுள்ளோம்.
விதிகள் கடைபிடிக்கப்படுவதும், ஒழுங்குமுறைகள் சரியாகப் பேணப்படுவதும் முன் நிபந்தனையாகும்!.
இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் ஏனைய தகவல்கள் உள்ளன.
மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்...
தொடர்பு- 00 44 7817262980,0044 7883474924
Email - pmardeurope@gmail.com

முக்கிய குறிப்பு - இந்த நிகழ்வு ஒழுங்கமைப்புக்கு தொண்டர்கள் தேவையால், பங்களிக்க முன் வருவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

Important Announcement Regarding the Token London Protest of 24.12.2020 Agisnst Force Cremation.
—————————
Attendees are kindly requested to register their names on or before 20.12.2020.
As COVID rules are in place we have to maintain social distancing. We as a disciplined people have to set an example to other to follow.
This day’s events have been organised in three different ways:
1. Motorcade procession along the High Commission of Sri Lanka in London.
2. Protest and a public meeting in front of the High Commission.
3. Those who are unable to join this event may organise different form of protests in areas where they live.
We request all the attendees and participants to strictly adhere to the following instructions:
1. Motorcade procession along the High Commission of Sri Lanka in London.
• We invite you to join this protest with your friends and families in vehicles, observing COVID rules.
• Kindly text us or email us the name of the driver, number of persons travelling, the vehicle number and the departure point.
• Posters and banners may be affixed to vehicles as you leave your house. (We can email them to you if requested.)
2. Protest and a public meeting in front of the High Commission.
• Maintaining the social distance rules of COVID only 60 people could participate in this event.
• Therefore, it is essential for those who wish to participate in this public meeting to register their names in advance on or before 20.12.2020. Kindly register via email or phone.
3. Local Protests.
• Those who are unable to join this event may organise different form of protests in areas where they live.
• We have requested expatriate Sri Lankans living in other countries to observe 24th and 25th as protest days.
• We request the organizer of such meeting to contact us for posters and banners.
This is a political struggle of the oppressed for fundamental rights.
This will represent multi-culture and reflect solidarity of Tamils, Muslims, Malayaga Tamils and Sinhalese.
We have requested several UK based organisations to extend their solidarity.
Coordination and discipline are key to our success. (For more information see the invitation.)
Contact: 00 44 7817262980 - 0044 7883474924
Email - pmardeurope@gmail.com
Important Note: We need volunteers. Kindly register your name and become a volunteer.
Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக