நுவரெலியாவில் வருடாந்தம் ஏப்ரல் மாதம் நடைபெறும் வசந்தகால கொண்டாட்டத்தை இம்முறை ஆகஸ்ட்
மாதத்தில் அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியில் நடத்துவது தொடர்பில்
பரீசிலிக்கப்பட்டுவருகின்றது என்று நுவரெலியா மாநகரசபை மேயர் சந்தன லால் கருணாதிலக்க தெரிவித்தார்.
“ 2020 ஆம் ஆண்டுக்குரிய வசந்தகால நிகழ்வுகளை
நடத்துவதற்கு 2019 டிசம்பர் மாதம் முதலே மாநகரசபை தயாராகிவந்தது. எனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக்
கருத்திற்கொண்டு அதனை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தற்போது
சுகாதாரம் சார்ந்த விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கிவருகின்றோம். குறைந்தவருமானம் பெரும்
குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.
தற்போதைய
சூழ்நிலையில் நுவரெலியா நகரில் பாரியளவில் ஹோட்டல்களை நடத்துபவர்கள் உட்பட சிறு
வியாபாரிகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நாம் பாதுகாக்க
வேண்டும். அதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
“ – என்றார்.
(க.கிஷாந்தன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக