வெள்ளி, 10 ஏப்ரல், 2020

அல்காஸிமி சிட்டி தொடர்பில் ஏனிந்தப் பொய்ப் பிரச்சாரம்! உண்மையைத் தௌிவுபடுத்துகிறது நிர்வாகம்


இந்தோனேசியாவிலிருந்து புத்தளம் தாராபுரம் அல் காஸிமி சிட்டி வந்தடைந்த நபர் ஒருவர் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்கள் வௌிவந்தது தொடர்பில், தாராபுரம் அல் - காசிமி ஜும்ஆ மஸ்ஜித் வேண்டுகோள் ஒன்றை வௌியிட்டுள்ளது. 
அதன் முழு விபரம் வருமாறு - 
கடந்த ஏப்ரல் 7ம் திகதி புத்தளம் அல் காசிமி சிட்டி

பகுதியில் வசித்து வந்த ஒருவர் Covid 19 தொற்றுக்கு
உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டார். இது தொடர்பாக பல இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களுக்கெதிராக உண்மைத் தன்மையை தெளிவு படுத்தும் வகையில் இவ் ஊடக அறிக்கையை வழங்குகின்றோம்.


குறித்த நபர் மார்ச் 16ம் திகதி அதிகாலை இந்தோனேசியாவிலிருந்து அல் காசிமி சிட்டியை வந்தடைந்தார். அதன் பின்னர் மார்ச் 18ம் திகதி காலையில் வேன் (Van) ஒன்றின் மூலம் மன்னார் தாராபுரத்திற்கு குறித்த நபரின் மைத்துனரின் இறுதிச் சடங்குக்காக தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சென்றார். அதேவேளை குறித்த இறுதிச் சடங்குக்காக அல் காசிமி சிட்டி பகுதியிலிருந்து சுமார் 50 பேர்களுடன் பகல் 12 மணியளவில் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று நள்ளிரவில் மீண்டும் புத்தளம் திரும்பியது.

குறித்த சம்பவமானது பல்வேறு ஊடகங்களில் Covid 19 தொற்றுக்குள்ளான நபர் குறித்த பேரூந்தில் மன்னார் சென்றதாகவும், குறித்த பேரூந்தில் சென்றவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்டுவருவதாகவும் போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பேரூந்தில் சென்றவர்களின் பெயர் விபரங்கள் சுகாதார உத்தியத்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது அல் காசிமி சிட்டி பள்ளி பரிபாலன சபையினால் வீட்டு இலக்கங்களுடன் ஏற்கனவே வழங்கப்பட்டதுடன் குறித்த நபர்களை இணங்காட்ட சகல உதவிகளையும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

மேலும் பேரூந்தில் மரண வீட்டிற்கு சென்ற நபர்கள் இன்று வரை தங்களது வீடுகளில் இருக்கின்ற போதும் உண்மைத் தன்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் மற்றும் சகோதர மொழி ஊடகங்கள் பரப்புவதாவது எமது ஊருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைவதுடன் தவறான விம்பத்தை ஏனைய மக்களுக்கு காட்டுவதாகவும் அமைகின்றது.

எனவே வாசகர்கள், ஊடகத்துறையினர் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி மற்றவர்களுக்கு பகிருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி- ரஸீன் ரம்ஸீன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக