வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மேற்கேயத்தோரால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது, எங்கள் ஆயுர்வேதத்தினால் முடியும்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களைக் குணப்படுத்த எங்களால் முடியும். கஞ்சு குடிப்பதும், புகை பிடிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல. அது ஒரு வியாபாரமே என அகில இலங்கை மருத்துவர் அமைப்பு குறிப்பிடுகின்றது.
மேற்கத்தேய சில வைத்தியர்கள் தான்றோன்றித் தனமாக 
செயற்படுகின்றனர். அவர்களது பரிந்துரைக்கின்றவை சுதேச மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற சிகிச்சை முறையே அல்ல எனவும் அவ்வமைப்பின் தலைவரும் சுதேச வைத்தியருமான உபுல் தேல பண்டாரா குறிப்பிடுகின்றார்.
இஞ்சி, கொத்தமல்லி என்பவற்றைக் கொடுப்பது சுதேச வைத்திய சிகிச்சை முறை அல்ல. அது ஒரு முதலுதவி மட்டுமே. அதற்கும் மேலான சிகிச்சை முறையொன்று சுதேச வைத்திய முறையில் உள்ளது எனவும், அதற்காக அவகாசத்தைத் தங்களுக்கு வழங்குமாறும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக