வெள்ளி, 10 ஏப்ரல், 2020

அமெரிக்காவிலுள்ள கொரோனா நோயாளர்கள் தொகை 5 இலட்சத்தை எட்டியுள்ளது.


நேற்றைய தினத்தில் உலகில் அதிகமான கொரோனா மரணங்கள் மற்றும் புதிதாக இனங்காணப்பட்டோர் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளது.

புதிதாக 33,500 கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 1900
பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 
தற்போது 460,000 நோயாளர்களுக்கும் மேல் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய அறிக்கைகளின்படி, பிரான்ஸில் 1341 மரணங்களும், ஐக்கிய இராச்சியத்தில் 881 மரணங்களும், ஸ்பைனில் 655 மரணங்களும் பதிவாகியுள்ளன.

தற்போதைக்கு உலகளாவிய ரீதியில் 95000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பலியாகியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 16 இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர் எனத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக