சனி, 16 நவம்பர், 2019

தேர்தல் சட்டத்தை மீறிய எரானுக்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்றும் (16) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
மொரட்டுவ பிரதேசத்தில் அவர் இவ்வாறு தேர்தல் பிரச்சார நடடிவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அப்பிரதேசத்தைச் சேர்ந்தோரின் எதிர்ப்புக்கு அவர் உள்ளானார் எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் பிரச்சார நடிவடிக்கைகள் ெசன்ற 13 நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது.
எரான் விக்கிரமரத்னவுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள காணொளி கோத்தபாய ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ அவரது முகநூல் பக்கத்தில் உள்ளிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக