திங்கள், 19 ஆகஸ்ட், 2019

ஆயுதப் பயிற்சிபெற்ற ஸஹ்ரானின் சகாக்கள் இருவர் அம்பாறையில் கைது!

ஸஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சிபெற்ற ஜேஎம்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின்
பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமுடன் நுவரெலியப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என விசாரணைகளின் போது தெளிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக