Facebook, YouTube, WhatsApp,Viber, Instagram, IMO, Snapchat ஆகிய சமூக வலைத்தளங்கள் இலங்கையில் மீண்டும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
போலியான செய்திகள், வதந்திகளை இல்லாமற் செய்து, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தச்
செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
மேலும், நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று பிற்பகல் 06.00 மணிவரை குளியாப்பிட்டிய, தும்மலசூரிய, பிங்கிரிய போன்ற இடங்களுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக