திங்கள், 6 மே, 2019

தீவிரவாதத்திற்கு மதமில்லை... முஸ்லிம், சிங்கள பெயர்தாங்கிகள் அனைவரும் தீவிரவாதிகளே...

இலங்கைய ஊடகங்களில் இவ்வாறு ஒரு பேச்சு வழக்கு உள்ளது... அதாவது அலுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, திகன, நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் கல்வீச்சு, தீ வைப்பு போன்றவற்றை மேற்கொண்டவர்கள் சிறு குழுவாம் (සුලු පිරිසක්) ஆனால் இலங்கையில் 21ம் திகதி 8 இடங்களில் இடம் பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு,  கிழக்கில் நேரடி மோதல் என்பன தீவிரவாத (ට්‍ර්ස්ටවාත) தாக்குதலாம்.


எனது பார்வையில் தீவிரவாதம் என்பது பொதுமக்கள் தமது கடமைகளை செய்யும் போது அவர்கள் மீது ஏதாவது ஒரு குழு காரணம் எதுவும் இன்றி தாக்குதல் நடாத்தினால் அது தீவிரவாத தாக்குதல் அல்லது பயங்கரவாத தாக்குதல். அவ்வகையில் இலங்கையில் 2014 தொடக்கம் 2019 இன்று வரை மதங்களை தாண்டி இடம் பெற்றது தீவிரவாத தாக்குதல்தான்.

இன்றைய தினம் (05.05.2019 11:00pm) நீர் கொழும்பு பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது இது பற்றி இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதிப்படுத்தும் சில இணையத்தளங்கள் பல செய்திகளை Video ஆதாரங்களுடன் வெளியிட்ட நிலையில் முஸ்லிம் வீடுகளில் மரக்கறி வெட்டும் கத்திகளை படையினர் கைப்பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிவித்த Hiru, Shakthi போன்ற தேசிய ஊடகங்களுக்கு செய்தி இன்னும் கிடைக்கவில்லை என்பதையும் நினைவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இறுதியாக இது தற்கொலை தாக்குதலுக்கு ஆதரவாகவும், நீர் கொழும்பு பதற்றத்திற்கு எதிரான பதிவுமல்ல. எமது முஸ்லிம் சமுகத்தை தேசிய ஊடகங்கள் குற்றவாளிக் கூண்டில் வைத்து எமக்கு அநியாயம் செய்யும் போது மறைப்பதை காட்டுவதற்கான ஓர் அவசர பந்தியாகும்.

இறுதியாக முஸ்லிம் ஊடகங்களிடம் வேண்டுகோள் முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்யும் அநியாயாத்தை எவ்வாறு பயங்கரவாத தாக்குதல் அல்லது தீவிரவாத தாக்குதல் என்கிறோமோ. அவ்வாறே சிங்கள பெயர் தாங்கிகள் செய்தால் பயங்கரவாத அல்லது தீவிரவாத தாக்குதல் என்று குறிப்பிடவும். எனெனில் தீவிரவாதத்திற்கு மதமில்லை.

-இப்னு அஸத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக