திங்கள், 13 மே, 2019

குளியாப்பிட்டியில் கடைகள் பல தாக்குதலுக்குள்ளாகியுள்ளன - பொலிஸ்

குளியாப்பிட்டி, ஹெட்டிபொல வீதியிலுள்ள மூன்று கடைகள் தாக்குதலுக்குள்ளானமை பற்றி நேற்று பிற்பகல் அறியக்கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேககர  தெரிவித்தார்.
அந்தக் கடைகளுக்குக் கற்கள் கொண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இன்று குளியாப்பிட்டி பிரதேசத்திலுள்ள கடைகள் கற்கள் கொண்டு
தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக