செவ்வாய், 2 ஏப்ரல், 2019

வறுமை கல்விக்கு தடையா? மனதில் தைரியம் இருந்தாலே போதும்!

வறுமை கல்விக்கு தடையா? மனதில் தைரியம் இருந்தாலே போதும். தடைகளை தகர்த்தெறிந்து சாதனைகள் படைத்திட...

இன்னும் கொஞ்சம் மேலே சென்று, இந்தியாவின் ஒரு ஆளுமையாக இன்றளவும் பேசப்படும் சீனிவாச சாஸ்திரியின் சரித்திரம் படிக்கவில்லையா? வறுமையுடன் போராடி அவர் சரித்திரம் படைக்கவில்லையா?

இப்படியெல்லாம் கேள்வி கேட்டு
தெறிக்கவிடுபவர்கள் வறுமையில் வாடி சாதனைபடைத்தோரல்லர்..

இப்படியெல்லாம் கேள்விகளை தெறிக்க விட, அடிப்படைத்
தகுதியாக ஒரு ஆண்ரயிடு ஃபோனும், மேலதிக தகைமையாக, ஒரு 'வெட்டி'யாக இருக்க்கிறார் என்ற தகைமையுமே போதுமானது.

கல்வியென்பது பணம் படைத்த மேட்டுக்குடி சமூகத்தினது தனியுரிமைச் சொத்து என்றொரு காலம் இருந்தது.

அந்த நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வியை பொதுமைப்படுத்த கன்னங்கரா விரும்பியதனாலோ என்னவோ, இலவசக் கல்வியை இலங்கைக்கு அவர் அறிமுகம் செய்தாலும், வறுமையின் பிடியின் காரணமாக பாடசாலையை காணவே கிடைக்காமல் போனோரையும், பாதிப் படிப்படிப்புடன் மீதிப் படிப்புக்கு விடை கொடுத்தோரையும் தடுத்து நிறுத்த அவரால் முடியாது போனது என்பது தான் உண்மை.

இன்னொரு மியன்மாரக இலங்கைமாற்றப்படப்போகிறதோ என்ற அச்சம் முஸ்லிம்கள் மனங்களில் தொற்றிக் கொண்ட அண்மைய காலங்களில் முஸ்லிம் சமூகம் ஒரு வர்த்தக சமூகமாக அன்றி, அதன் கல்வி நிலை தூக்கி நிறுத்த்தப்பட்டு, ஒரு கல்விச் சமூமாக அது மாற்றம் பெற வேண்டியதன் அவசியம் அவசியமும் அவசரமும் வெகுவாகவே உணரப்பட்டது.

கல்வி தான் ஒரு சமூகத்தின் முதுகெலும்பு.
அது பொருளாதாரத்தோடு நேரிடையாகவே தொடர்பு படுகிறது.

தர்மத்தின் சிறப்பு குறித்து ஆயிரம் தடவைக்கு மேல் மிம்பர் மேடையில் ஏறி முழக்கமிடும் ஆலிம்களுக்கு, ஒரு குடும்பத்தையோ, ஒரு சமூகத்தையோ தூக்கி நிறுத்தும் விதமாக அவை அமைவதன் அவசியத்தை கூறி, அதற்கான பொறிமுறைகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்க தெரியாமல் போனதாலோ என்னவோ,

ஒரு அணர்த்தமோ, ஒரு பள்ளிவாசலின் நிர்மானப்பணி வேலைத் திட்டமோ வரும் வரை காத்திருந்து தனது செல்வங்களை அங்கு வாரி இறைத்து வரும் காட்சிகள் காலத்தின் கோலங்களாகிப் போயுள்ளன!

நமது சமூகத்தை நெறிப்படுத்துவதும், கட்டமைப்பதும் ஆலிம்களின் மட்டுமல்ல, அதுவொரு சமூகப் பணி என எண்ணியதாலோ, அல்லது,
படிப்பும் பண்பாடும் மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவது படித்தோரின் பணி என எண்ணியதனாலோ என்னவோ, தென்மாகாணத்தை மையமாகக் கொண்டு ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் பணியில் இறங்கி செயல்பட்டுவரும் FEED நிறுவனத்தின் கல்விசார் செயற் றிட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவையே..

இந்நிறுவனத்தின் தலைவராக இருந்து கொண்டு, அதன் பல்வேறு பொறுப்புகளை தனது தோல்களில் சுமந்து அதன் அச்சாணியாக செயல்பட்டு வரும் சகோ Rasmy Galle உம் ஒரு கர்ப்பிணியாக இருந்து கொண்டு களத்தில் இறங்கி அவருக்கு உறுதுணையாக தோளோடு தோள் நின்று உழைத்து வரும் அவரது மனைவியின் சேவைகளும் பாராட்டப்பட வேண்டியவையே.

இறுதியாக,

தென் மாகாணத்திலுருந்து பல்கலைக்கு தெரிவானோருக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ரஸ்மி அவர்கள்
"பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அடிப்படையில் நீங்கள் பெற்றுக்கொள்ளும் உதவு தொகையுடன் நின்று விடாமல், எமது நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்' என விடுத்த வேண்டுகோளை ஏற்று பல்கலைக்கழக மாணவன் என்ற அடிப்படையில் நானும் உங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.

-மொஹமட் பின் அஜ்வத்

---------------------------------------------------------------
E-mail: ceyloncnews@gmail.com
---------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக