வியாழன், 18 ஏப்ரல், 2019

தமிழ்மொழித் தின விழாப் போட்டிகளில் அஸ்ஸபாவுக்கு ஏழு முதலிடங்கள்


2019 ஆம் ஆண்டிற்கான மாத்தறை மாவட்ட தமிழ்மொழித் தின விழாப் போட்டிகள் அண்மையில் மாத்தறை தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன.
தென்மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.டீ.எம். ஆகில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போட்டிகளில், மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலய மாணவர்கள் போட்டிகளில் 7 முதலிடங்களையும், 3 மூன்றாமிடங்களையும பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தனி நிகழ்ச்சிகளில் பிரிவு 4 இலக்கணப்போட்டி, பிரிவு 4 குறுநாடகம், பிரிவு 3  பாவோதல், பிரிவு 4 பாவோதல், பிரிவு 4 பேச்சு என்பவற்றில் முறையே எம்.ஆர்.எப்.ஷிப்றா, எம்.ஐ.எப். ஸுமையா, எம்.எம்.எப். ருமைதா, எம்.எஸ்.எப் மின்ஹா, எம்.பீ.எம். ஹஸ்ஸான்கியோர் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.
குழு நிகழ்ச்சிகளில் தரம் 6 - 8 மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற தமிழறிவு வினா - விடைப் போட்டியில் எம்.ஹாமித்எம்.ஐ.எம்.அஹ்ஸன் எம்.எம்.எப்.முஷ்பிகாஎம்.எப். பஸ்ரானா பானுஎம்.ஏ.எப். ஸாரா கியோரும் திறந்த போட்டி முஸ்லிம் நிகழ்ச்சியில் எம்.எஸ்.எப். மின்ஹா, எம்.ஏ.எப். அப்ரா, ஐ. அஷ்னா, எம்.எஸ்.எப். ஸல்மா, எம்.எம்.எப். ருமைதா, எம்.எஸ்.எப். ஷிஹ்மா, எம்.ஏ.எப். அஷ்பா, எம்.ஆர்.எப். ரஸ்னாகியோரும் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.
பிரிவு 1 பேச்சு, பிரிவு 2 பாவோதல், பிரிவு 1 வாசிப்பு ஆகியவற்றில் எம்.எப்.எப். இஷ்மா, எம்.ஏ.எப். அஷ்பா, எம்.ஏ இன்திகாப் அஹமட்கியோர் மூன்றாமிடங்களையும், திறந்த போட்டி தமிழறிவு வினா - விடைப் போட்டியில் எம்.எல்.எம் ஸபீர், எம்.பீ.எம். அப்பாஸ்
எம்.ஆர்.எப்.ஷிப்றா, எம்.என்.எப். ஷஹ்லா, எம்.எஸ்.எப். பர்ஹாகியோர் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக