சனி, 23 மார்ச், 2019

ஜனாதிபதித் தேர்தல் காலதாமதமாகும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பதவிக்காலம் 2020 மே மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவுபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேரா குறிப்பிடுகிறார்.
19 ஆவது அரசியல் யாப்பு, சபாநாயகர் கையொப்பமிட்ட திகதியிலிருந்தே செல்லுபடியாகும் என்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தனது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதியினால்  மேல் நீதிமன்றின் கருத்தினை வினவினால், அந்தத் தீர்மானமே வழங்கப்படும் எனவும் பா.உ. குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறாயினும் இதற்கு முன்னர் தனது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி, பதவிக்காலம் ஐந்தா இல்லை ஆறா என வினவியபோது மேல் நீதிமன்று அறிவித்தது.
இதுதொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக