சனி, 23 மார்ச், 2019

வெலிகமவில் மதுச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! காணொளி இணைப்பு


இன்று (23) வெலிகம சுமங்கள வித்தியாலத்திற்கு அருகாமையில், காலை 9 மணிக்கு மதுச்சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

வெலிகம  நகரசபையினால் -  600 மதுச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் இன்று வழங்கப்படவுள்ளமை  தொடர்பில், சர்வமதத் தலைவர்கள், போதைப் பொருளுக்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் அமைப்புக்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பில் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திரஜித்ஹிமி கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் நேற்று (22) லங்காதீப பத்திரிகையில், வெலிகம - மிரிஸ்ஸ பிரதேசங்களில் உள்ள உல்லாச விடுதிகளுக்கு மது விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கவுள்ளதாக செய்தி வெளியாகியது. இதுதொடர்பில் சர்வ மதத் தலைவர்கள் என்றவகையில் நாங்கள் எதிர்ப்புத்தெரிவிக்கவே இங்கு ஒன்றுகூடியுள்ளோம். 

இதுதொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரி அனுமதிப்பத்திரம் வழங்க மாட்டோம் என்று குறிப்பிட்டார். என்றாலும், ஆனால் அமைச்சர் ஒருவர் திருட்டுத்தனமாக இந்த விடயத்தை மேற்கொண்டு வருகின்றார். நாளையும் இதுதொடர்பில் மகாசங்கத்தனரில் பெரும்பான்மையோரின் உதவியுடன் பாரிய எதிப்பைத் தெரிவிப்போம் என்றும்  குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக