சனி, 23 மார்ச், 2019

மீண்டும் தேசிய அரசாக இணையப்போகிறது ஐதேகவும் சுதந்திரக் கட்சியும்

ஐக்கிய தேசியக் கட்சியும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் தீர்மானித்து, அதற்கான பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரபலமான தலைவர் ஒருவரிடையே நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

பெரும்பாலும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஐதேக - ஸ்ரீசுக தேசிய அரசாங்கம் பாராளுமன்றில் மீண்டும் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அமைச்சர்  ராஜித்த சேனாநாயக்கவுடன், சென்ற வாரம்  உலங்குவானுர்தியொன்றினுாடாகப் பயணித்து, முக்கிய நபர் ஒருவர் அளவளாவியுள்ளார் என்றும்  தெரியவருகின்றது.
இவ்வாறு தேசிய அரசாங்கம் மீண்டும் உருவானால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமற் போகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக