செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பகடி வதை என்கின்ற பயங்கரவாதத்துக்கெதிரான சட்டம்


மனோ வக்கிரத்தின் உச்சக்கட்டமாக சக மனிதனை தனது சக தோழனை துன்புறுத்தி அவமானப்படுத்தி அவனது அன்டர்வெயார் அவிழ்த்த அம்மணமாக்கி அந்த அசிங்கப்படுத்தி அதில் ட்ரக்ஸ் எடிக்ட்டாய் சுகிக்கின்ற பல்கலைக்கழக சேடிஸ்ட் மாணவர்களின் ராக்கிங்கின் எல்லை மீறிப் போன அட்டூழியங்களை அடக்குவதனை ஒரே குறிக்கோளாகக் கொண்டு ராக்கிங்கை கடூழிய சிறைத்தண்டனையால் தண்டிக்கப்படக்
கூடிய ஒரு மெகா சைஸ் குற்றமாக இலங்கை பாராளுமன்றம் 1998ம் ஆண்டு 20ம் இலக்க “கல்வி நிறுவனங்களில் பகிடி வதை மற்றும் ஏனைய வடிவங்களிலான வன்முறைகளை தடை செய்கின்ற சட்டத்தினை (Prohibition of Ragging and Other Forms of Violence in Educational Institutions Ac No: 20 of 1998. பல்கலைக்கழகங்களில் மற்றும் ஏனைய அனைத்து கல்வி நிறுவனங்களில் பகிடி வதை என்ற ரோக்த்தனமான பெயரில் சக மனிதனின் உடலோடும் உள்ளத்தோடும் கபடி ஆடி காயப்படுத்துகின்ற ராக்கிங் மற்றும் அனைத்து விதமான வன்முறைகளையும் தண்டிக்கப்படக் கூடிய நாதாரி குற்றங்களாக இந்த சட்டம் அறிமுகப்படுத்துகின்றது.

தொண்ணூறுகளில் ராக்கிங்கின் கிளைமேக்சாகத் திகழந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவனான வரப்பிரகாஷ் ராக்கிங் காரணமாக தழுவிக் கொண்ட அநியாயச்சாவினை அடுத்து இந்தச்சட்டம் ஆக்கப்பட்டு நாட்டில் அமுலுக்கு வந்தது.

ஆனாலும் இந்தச்சட்டம் பாராளுமன்றத்தால் ஆக்கப்பட்டு அமுலுக்கு வநத பின்னரும் ராக்கிங்கின் கதகளி இன்னும் பல அப்பாவி மாணவர்களை அதகளப்படுத்திக் கொண்டிருக்கின்றது எனறால் கடுமையான இந்தச்சட்டம் இறுக்கமான முறையில் இன்னும் அமுல்படத்தப்படவில்லை என்றே அர்த்தம்.
“ராக்கிங் (Ragging)” என்பது “ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலுகின்ற மாணவன் அல்லது அக்கல்வி நிறுவனத்தின் ஊழியர்களுல் ஒருவர் யாருக்கேனும் உடலியல் அல்லது உள ஊறு மனவலி அல்லது அச்சம் போன்றவற்றை ஏற்படுத்துகின்ற அல்லது ஏற்படத்தவிருக்கின்ற ஏதாவது ஒரு செயல் ஆகுமென இந்த சட்டம் வரைலவிலக்கணம் கொடுக்கின்றது.

இந்த சட்டத்தின் பிரிவு-02 (01) ராக்கிங் குற்ற்ம் பற்றி பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “ஒரு கல்வி நிறுவனத்துக்குள்ளே அல்லது அதற்கு வெளியே பகடி வதை குற்றத்தைப் புரிகின்றவர் அல்லது அதில் பங்குபற்றுபவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றமொன்றைப் புரிகின்றார்.

நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையான ஒரு விளக்கத்தின் பின்னர் அவர் குற்றவாளியாகக் காணப்படுகின்றவிடத்து இரண்டு வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டணைக்கு ஆளாவதோடு குறித்த குற்றம் யாருக்கெதிராக செய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றாரோ அவருக்கு குற்றவாளி நீதிமன்றத்தால் திர்மானிக்கப்படுகின்ற தொகையை நட்ட ஈடாக செலுத்த வெண்டுமெனவும் நீதவானால் கட்டளையாக்க்ப்படலாம்.
உப பிரிவு (02) ன் படி “பகடிவதை செய்கின்ற போது யாரேனும் ஒருவர் கல்வி நிறுவனத்தின் மாணவர் அல்லது ஊழியருக்கு பாலியல் தன்புறுத்தல் அல்லது கடும் காயம் விளைவித்தலை ஏற்படுத்துகின்றாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த நபராவார் என்பதோடு நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையான ஒரு விளக்கத்தின் பின்னர் அவர் குற்றவாளியாகக் காணப்படுகின்றவிடத்து பத்து வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டணைக்கு ஆளாவதோடு குறித்த குற்றம் யாருக்கெதிராக செய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றாரோ அவருக்கு நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுகின்ற தொகையை குற்றவாளி நட்ட ஈடாக செலுத்த வெண்டுமெனவும் நீதவானால் கட்டளையாக்கப்படலாம்.
பிரிவு-03 “ஒரு கல்வி நிறுவனத்துக்குள்ளே அல்லது அதற்கு வெளியே ஒரு மாணவனுக்கு அல்லது அந்த நிறுவனத்தின் ஊழியர் யாரேனும் அவர்களது கௌரவத்துக்கு, ஆதனங்களுக்கு ஊறு விளைவிப்பதாக வாய் மூலம் அல்லது எழுத்து மூலம் அச்சுறுத்துகின்றாரோ அல்லது பாதிக்கப்படுகின்றவர்கள் அக்கறை கொண்டுள்ள ஏனைய நபர்களுக்கு அவர்களது கௌரவம், ஆதனங்கள், போன்றவற்றுக்கு ஊறு விளைவிப்பதாக வாய் மூலம் அல்லது எழுத்த மூலம் அச்சுறுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரை அவர் சட்ட ரிதியாகச் செய்ய கடமையற்ற ஏதேனும் செயலைச் செய்ய கட்டாயப்படுத்தி அல்லது சட்ட ரீதியாகச் செய்ய கடமைப்பட்ட செய்யாமல் விடுவதற்கு அச்சுறுத்துகின்ற எவரும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமொன்றைப் புரிகின்றார். நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையான ஒரு விளக்கத்தின் பின்னர் அவர் குற்றவாளியாகக் காணப்படுகின்றவிடத்து ஐந்து வருடத்துக்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டணைக்கு ஆளாவார்.
பிரிவு-04 “ஒரு கல்வி நிறுவனத்துக்குள்ளே அல்லது அதற்கு வெளியே ஒரு மாணவனது அல்லது அந்த நிறுவனத்தின் ஊழியரது அல்லது அந்த நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற யாரேனும் நபர்களது தனி நபர் சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரத்தை தடுக்கின்ற மாதிரி நடந்து கொள்ளுகின்றாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த நபராவார் என்பதோடு நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையான ஒரு விளக்கத்தின் பின்னர் அவர் குற்றவாளியாகக் காணப்படுகின்றவிடத்து ஏழ வருடங்களுக்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டணைக்கு ஆளாவார்.
பிரிவு-05 ““ஒரு கல்வி நிறுவனத்தின் மாணவனது அல்லது அந்த நிறுவனத்தின் ஊழியரது அவர்களது போக்கில் யாராவது குறுக்கிட்டு சட்ட முரணாக அவர்களை அவர்கள் பாதையில் செல்லாது தடுக்கின்றாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றமொன்றைப் புரிகின்றார். நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையான ஒரு விளக்கத்தின் பின்னர் அவர் குற்றவாளியாகக் காணப்படுகின்றவிடத்து ஏழு வருட காலத்துக்கு மேற்படாத கடூழியசிறைத்தண்டணைக்கு ஆளாவார்.
பிரிவு-07 (01) “யாரேனும் ஒருவர் சட்ட அதிகாரமின்றி பலாத்காரமாக ஒரு கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இடத்தினை இடம் கொள்ளுகின்றாரோ
அவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த நபராவார் என்பதோடு நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையான ஒரு விளக்கத்தின் பின்னர் அவர் குற்றவாளியாக்க் காணப்படுகின்றவிடத்து பத்து வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டணைக்கு ஆளாவார். அல்லது பத்தாயிரம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணத்துக்கு ஆளாவார். அல்லது இரண்டையும் ஆனுபவிக்க வேண்டி வரும்.
பிரிவு-7(2) “ஏதேனும் கல்வி நிறுவனத்தின் சொத்துகளுக்கு யாரேனும் சேதத்தை எற்படுத்துகின்றாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த நபராவார் என்பதோடு நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையான ஒரு விளக்கத்தின் பின்னர் அவர் குற்றவாளியாக்க் காணப்படுகின்றவிடத்து இருபது வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டணைக்கு ஆளாவார் என்பதோடு ஐயாயிரம் ரூபா தண்டப்பணமு; செலுத்த் வெண்டி வரும். அத்தோடு அவர் ஏற்படுத்திய சேதத்தின் மும்மடங்கு தொகையை நட்ட ஈடாக செலுத்தவும் வேண்டும்.
பிரிவு-09 (1) ன் படி “ இந்த சட்டத்தின் பிரிவு பிரிவு-02(2) அல்லது பிரிவு-04 ன் கீழ் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற நபர் அல்லது குற்றம் சாட்டப்படுகின்ற நபருக்கு மேனீதிமன்றம் மாத்திரமே பிணை வழங்க முடியும்.
பிரிவு-9(2)ன் படி “இந்த சட்டத்தின் பிரிவு பிரிவு-02(2) அல்ல்து பிரிவு-04 ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விளக்கத்தின் பின்னர் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் அல்லது குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் தனது குற்றத் தீர்ப்புக்கெதிராக மேன் முறையீடு செய்கின்ற போது அந்த குற்றவாளிக்கு குறித்த நீதிமன்றம் குற்றத்தின் தன்மை மற்றும் குற்றம் நிகழ்ந்த சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஒன்றில் பிணை வழங்கலாம் அல்லது பிணயை மறுக்கலாம்.
பிரிவு-08 (அ) ன் படி” இந்த சட்டத்தின் கீழ் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட யாரேனும் ஒருவர் மாணவராக இருக்கின்றவிடத்து அந்த மாணவரை குறித்த கல்வி நிறுவனம் வெளியேற்றம் செய்யலாம் பிரிவு (ஆ) வின் படி “குற்ற்த் தீர்ப்பளிக்கப்பட்டவர் அந்த நிறுவனத்தின் ஊழியர் எனில் அவரை பணியிலிருந்து நீக்கம் செய்யலாம் என் ஏற்பாடு செய்கின்றது.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளி எனக் காணப்பட்டவருக்கு குற்றவியல் நடபடிக் கோவை பிரிவு-303ன் படி வழங்கப்படுகின்ற ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட முடியாது. குற்றவாளி எனக்காணப்பட்டால் ஆளு அப்புறம் அப்படியே யூ டேர்ன் அடித்து ஜெயில் களிதான்.
இதே பிரிவின் (ஆ) உப பிரிவின் படி இந்த சட்டத்தின் பிரிவுகளான 2(2) மற்றும் 04ன் கீழ் குற்றவாளியாகக் காணப்படுகின்ற யாருக்கும் குற்றவியல் நடபடிக் கோவை பிரிவு-306 ன் கீழ் வழங்கப்படுகின்ற சலுகையாகன நிபந்தனையுடனான விடுவிப்பே கிடையாது என ஏற்பாடு செய்கின்றது.
இலங்கையின் மிக மிக இறுக்கமான சட்டகளுல் இதுவுமொன்று. ஆனால் நம்ம சைக்கோ சிரியல் கில்லர்களான பல பல்கலைக்கழக பிக்காலிப்பசங்க கொஞ்சமும்; பயமில்லாமல் ராக்கிங் மேக்கிங்கில் ரொம்பவுமே பிஸி மோடில் இருக்கினறார்கள்.
இந்த சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் ராக்கிங்கின் இம்சைகளிலிருந்து ஓரளவுக்கேனும் பல்கலைக்கழங்கங்களின் பட்டலந்த கேம்புகளை ஒழிக்கலாம். இதற்கு சட்டம் மட்டுமல்ல ராக்கிங்கினால் பாதிக்கப்படுகின்ற ஜுனிய சிஷ்ய கோடிகளும் ஒத்தழைக்க வேண்டும். பயமின்றி தமக்கு நடக்கின்ற பகடிவதை பயங்கரங்களை வாசிட்டி நிர்வாகத்துக்கும் காவல் துறைக்கும் முறைப்பாட செய்ய முன் வர வேண்டும்.
-கிண்ணியா சபருள்ளாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக