திங்கள், 25 பிப்ரவரி, 2019

`தமிழ்க் கலாசாரத்தைச் சீனாவில் பிரதிபலிக்க வேண்டும்!’ - யுனான் மின்சு பல்கலைக்கழகப் பேராசிரியை நிறைமதி

"சீனாவில் தமிழ்மொழியின் பெருமைகளை விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு எங்களது பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தை அமைக்கலாம். நாங்கள் தென்னிந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நட்புப் பாலமாக இருக்க விரும்புகிறோம்."

``மலர்கள் போன்ற வடிவமைப்பு உள்ள தமிழ் எழுத்துகள் என்னை வசீகரித்தன. தமிழ் மொழியின் மீதான காதலால் சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியையாக மாறி உள்ளேன். தமிழ் மொழிக்கும்,

சீன மொழிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்ய ஆர்வமாக உள்ளேன்" என்கிறார் யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியை நிறைமதி.

கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தமிழ்த்துறை சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார் கிகி ஜாங். இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தன் பெயரை நிறைமதி என்று மாற்றியுள்ளார். இவரிடம் பேசினோம். தூய தமிழில் நம்மிடையே உரையாடி அசத்தினார். 

``அப்பா மருத்துவர். அம்மா நிதி சார்ந்த பணி செய்து வருகிறார். ஒரே மகள். நிதித்துறையில் என்னை நிபுணத்துவம் பெற்றவராக மாற்ற வேண்டும் என்று அப்பா விரும்பினார். ஆனால், பள்ளிப்படிப்பின் போது மொழித் துறையின் மீது ஈர்ப்பு இருந்தது. 2007- 2011-ம் ஆண்டு சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். பட்டப்படிப்பு படிக்கும்போது தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. மலர்கள் போன்ற தமிழ் எழுத்துகள் என்னை வசீகரித்தன. தமிழைக் கற்றுக்கொள்ளச் சீன தமிழ் ஒலிபரப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

படித்து முடித்தவுடன் சீன வானொலியின் தமிழ்பிரிவில் வேலை கிடைத்தது. சீனாவின் சுற்றுலா தலங்கள், இசை, கலாசாரம் என்று பல விஷயங்களைத்  தமிழ் நேயர்களுக்காக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, ஹாங்காங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அங்கு தெற்காசியா குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். படித்து முடித்தவுடன் ஹாங்காங்கிலேயே வேலை கிடைத்தது. 

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக