சனி, 2 பிப்ரவரி, 2019

அஸ்ஸபாவில் சிரேஷ்ட மாணவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழாவும் பாராட்டு விழாவும்

வெலிகாமம் - மதுராப்புர அஸ்ஸபா முஸ்லிம் வித்தியாலத்தில் இன்று (31), சிரேஷ்ட மாணாக்கருக்குப் பதக்கம் அணிவித்தல், ஆளுமை மிக்க மாணாக்கரைப் பாராட்டுதல் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி காந்தி அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா ஆகியன, பாடசாலையின் அதிபர் திரு. எம்.எஸ். எம். ஹிப்ளர் தலைமையில் இடம்பெற்றன.
நிகழ்வில் வெலிப்பிட்டிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. யு.ஈ. ரவீந்திர பதிரண , பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மதனியா கலீல், ஆசிரிய ஆலோசகர்கள், வெலிகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம். அஜ்மல் மற்றும் கல்வியியலாளர்கள், முக்கிய உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக