வெலிகாமம் - மதுராப்புரயைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில்
முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்) தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர். வீ.
நில்மினி கே. விதாரன முன்னிலையில் நாடு முழுவதுக்குமான சமாதான நீதவானாக அவர்
சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மதுராப்புர முஸ்லிம் விவாகப் பதிவாளரான இவர், வெலிகமயின்
ஏனைய பிரதேசங்களினதும், போர்வைப்
பிரதேசத்தினதும் பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் கடமையாற்றுகின்றார்.
சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளரும், தமிழ்மொழி வளவாளருமான இவர்,
இலத்திரனியல் ஊடகங்கள்
பலவற்றில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றுகின்றார்.
ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையில் வருகைதரு தமிழ்மொழி விரிவுரையாளராகவும் கடமையாற்றும்
இவர், இஸ்மாயில் - பீபி ஜெஸீமா தம்பதியினரின் சிரேட்ட புதல்வரும் அஸ்ஸபா வித்தியாலயம்,
அறபா தேசிய பாடசாலை
என்பவற்றின் பழைய மாணவருமாவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக