திங்கள், 15 அக்டோபர், 2018

த.தே.கூட்டமைப்பு வசமுள்ள பிரதேசசபைகள் புறக்கணிக்கப்படுகிறதா? காரைதீவு பிரதேசசைபத் தவிசாளர் ஜெயசிறில் கேள்வி!

த.தே.கூட்டமைப்பு வசமுள்ள தமி;ழ்ச்சபைகளை பார்க்கின்றபோது மிகவும் பழைய
வாகனங்களே காணப்படுகின்றன. இது ஒருவகையில் திட்டமிட்ட புறக்கணிப்பு .
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சபைகளுக்கு புதிய வாகனம்
மறுக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சியிலும் இப்படியான  பாரபட்சம்
தொடர்வது வேதனைக்குரியது.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.


தனது வாகனம் பழுதடைந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த தவிசாளரிடம்
வினவியபோது அவர் இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;:
எமக்கு அவசியாக ஒரு கெப் வாகனமும் ஒரு லோடரும் இரு வவுசர்களும்
தேவையென்று வருட ஆரம்பத்திலேயே உள்ளுராட்சி அமைச்சிடம்
விண்ணப்பித்திருந்தோம்.

தற்போது கெப் தவிர்ந்த ஏனைய
வாகனங்களைத்தருவதாகக்கூறப்பட்டி
ருக்கிறது.இதில் அரசியல் சதி
இடம்பெற்றிருப்பதாக அறிகிறேன்.
உண்மையில் எமக்கு அத்தியாவசியமாக கெப் வாகனம் தேவை. எனது வாகனம்
பழுதடைந்துவிட்டது.அதனைக் கட்டியிழுத்தும் தள்ளியும் திரியவேண்டிய
அவலநிலையுள்ளது.

நான் மாட்டுவண்டிலிலும் செல்வேன். ஆனால் அது எனக்கு கௌரவமில்லை. ஏன் சபை
உறுப்பினர்களுக்கு கௌரவமில்லை எம்மைத்தெரிந்த காரைதீவு மக்களுக்கும்
அழகல்ல.
இங்குள்ள ஏனைய சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை
சபைகளைப்பார்க்கின்றபோது அதிநவீன கெப் வாகனங்களை தவிசாளர்கள்
பயன்படுத்துகிறார்கள்.மகிழ்ச்சி
.
 ஆனால் காரைதீவு நாவிதன்வெளி கொக்கட்டிச்சோலை போன்ற தமிழ்ச்சபைகளை
பார்க்கின்றபோது மிகவும் பழைய வாகனங்களே உள்ளன. இது ஒருவகையில்
திட்டமிட்ட புறக்கணிப்பு . தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சபைகளுக்கு புதிய
வாகனம் மறுக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சியிலும் இப்படியான  பாரபட்சம்
தொடர்வது வேதனைக்குரியது. என்றார்.

காரைதீவு நாவிதன்வெளி கொக்கட்டிச்சோலை திருக்கோவில் ஆலையடிவேம்பு போன்ற

 
(காரைதீவு சகா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக