சனி, 11 ஆகஸ்ட், 2018

பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளர் - கொடப்பிட்டிய

வெலிகாமம், மதுராகொட முஸ்லிம் விவாகப் பதிவாளர் முஹம்மது இஸ்மாயில் முஹம்மது பைரூஸ் (கலைமகன் பைரூஸ்), அதுரெலிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதவி வெற்றிடமுள்ள கொடப்பிட்டிய (போர்வை)ப் பிரதேசத்தின் பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளராக, பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018.08.09 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல்வரை இவர், மேற்படி பிரதேசத்தின் பதில் முஸ்லிம் விவாகப் பதவிளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெலிகாமம் கல்பொக்கை, வட்டகெரமுல்ல பிரதேசங்களினதும் பதில் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் இவர் கடமையாற்றுகிறார்.

கலைமகன் பைரூஸ், 75/88 A, ‘தமிழ் அறிவகம்’, மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகம என்ற முகவரியினுடாக இவரைத் தொடர்புகொள்ளுமாறு கொடப்பிட்டிய முஸ்லிம்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக