ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

‘பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடம் விடைகளைக் கேட்க வேண்டாம்’ - கல்வி அமைச்சர்

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடம் எவ்வாறு கேள்விகளுக்கு விடையளித்தீர்கள், என்ன விடையளித்தீர்களென தேவையற்ற வினாக்களை எழுப்பி, அழுத்தங்களை விடுக்க வேண்டாமென, பெற்றோர்களிடம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இன்றைய தினம் (05) நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பரீட்சையை ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தேசிய மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டமைக்கான காரணம் பாடசாலை மாணவர்கள் பரீட்சை முடிந்து சுதந்திரமாக விடுமுறைக் காலத்தைக் கழிப்பதற்காகவெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக