
ஸ்ரீலங்கா
முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்காக தெரிவு
செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் விபரங்கள் உத்தியோகபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
போரத்தின்
21ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது.
இதேவேளை,
புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் போரத்தின்
முதலாவது செயற் குழுக்கூட்டம் 2018 ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை
தெஹிவலையிலுள்ள நொலேட்ஜ் பொக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
இதன்போது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், ஜப்னா முஸ்லிம் இணையத்தள பிரதம ஆசிரியருமான
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக