புதன், 29 ஆகஸ்ட், 2018

ஜெயந்தியாவ குளத்தில் மூழ்கி ஏறாவூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழப்பு


ஏறாவூர் அரபுக்கல்லூரியொன்றின் இறுதியாண்டு மாணவர்கள் இருவர் ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில நீரில் மூழ்கி இன்று (29.08.2018) புதன்கிழமை உயிரிழந்துள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அறபுக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் விடுமுறை காலம் என்பதால் ரெதிதென்னை பகுதிக்கு சுற்றுலாச் சென்று அங்கு ஜெயந்தியாவ குளத்தில் நண்பர்களுடன் தோணியில் சென்ற வேளை தோணி கவிழ்ந்ததில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள்.


உயிரிழந்த இம் மாணவர்கள் இருவரும் இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர்களாகும்.

ஏறாவூர் ஸக்காத் கிராமத்தை சேர்ந்த முகம்மட் ஷாகீர் மற்றும் மீராகேணி கிராமத்தைச் சேர்ந்த முகம்மட் சாஜித் ஆகிய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்று மாணவர்கள் இந்த தோணியில் சென்றுள்ளனர். அதில் ஒரு மாணவர் மீட்கப்பட்டு வாழைச் சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு மாணவர்களின் சடலங்களும் வாழைச்சேனைஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரதேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

-Noordeen Msm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக