சனி, 25 ஆகஸ்ட், 2018

“பாரி” குறுந்திரைப்படத்திற்கு திறமைச் சான்றிதழ்

தென்னிலங்கையின் முதல்தர குறுந்திரைப்பட நிறுவனமான Maas Media வின் தயாரிப்பில் வெளியான “பாரி” குறுந்திரைப்படமானது இம்முறை ITN தொலைக்காட்சியின் ஊடக அனுசரணையில் இடம்பெற்ற 2018ம் ஆண்டுக்கான  சர்வதேச குறுந்திரைப்படப் போட்டியில் (International Short film contest 2018) திறமை  சான்றிதழ் பெற்றுக்கொண்டது.


மும்மொழிகளிலும் இடம்பெற்ற இக்குறுந்திரைப்படப் போட்டியில் 160க்கும் மேற்பட்ட குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு 31ம் இடத்தை “பாரி” பெற்றுக்கொண்டுள்ளது. இப்போட்டி நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா (2018. 08.23) இன்று தரங்கனி திரையரங்கில் இடம்பெற்றது.

நாட்டுகாக போராடிய ஓர் இராணுவவீரன் தனது மகனை வளர்க்க போராடுகின்ற ஓர் போராட்டமே இக்கதையின் கருவாகும். அதாவது இன்று சமூகத்தில் போதைப்பொருள் பாவனை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இன்று கைத்தொலைபேசி பாவனை, வீட்டில் தனிமையில் இருத்தல், பெற்றோர் தீர வீசரிக்காமல் பணத்தை பிள்ளைகளுக்கு வழங்குதல் என்பன இந்த தீய பழக்கம் மாணவர்களிடம் பரவ காரணமாக உள்ளது. இவற்றை எடுத்துக் கட்டும் விதமாக தயாரிக்கப்ட்டுள்ளது.

இக்கதையை வெற்றிகரமாக் வெளியிட துணைபுரிந்த அணைத்து அன்பர்களுக்கும் Mass Media நிர்வாகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக