ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தடாகத்தின் பன்னாட்டுப் படை விழாவும் விருது வழங்கலும்

தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு நடாத்தும் பன்னாட்டுப் படை விழா - 2018 இம்மாதம் 18 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் உள்ள அஞ்சல் தலைமையகக் கட்டட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

அன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம்  பி.ப. 6 மணிவரையும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


பல்வேறு துறைசார் ஆற்றல்களைக்  கொண்ட 60 பேர் நிகழ்வில் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

2016 - 2017 களில் வெளியான சிறந்த நுால்களுக்கு முத்துமீரான் விருது, 100 கவிதைகள் அடங்கிய நுால்  வெளியீடு, தடாகம் நடாத்திய கவிதைப்  போட்டிகளில் கலந்துகொண்டு  வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ்கள் வழங்கல், மூன்று கவிஞர்களது நுால்கள்  வெளியீடு என்பன அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக