வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞர் தொலைக்காட்சியில் கொழும்பு (தமிழறிஞர் மு. கருணாநிதி) அஞ்சலி தொகுப்புகள்மறைந்த தமிழக முதல்வர் தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு சர்வதேச ரீதியாக உலக நாடு ஒன்றில் முதன்முதலாக இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் நாளை (11) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இலங்கையின் மூத்த எழுத்தாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் தலைமையில் நடைபெறும்.

இந்த முதலாவது அஞ்சலிக் கூட்டம் தொடர்பான தொகுப்பை
தமிழகத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சி தனது செய்திச் சேவையில் நிகழ்வு பெற்றுக் கொண்டு இருக்கையில் அவ்வப்போது ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கலைஞரின் கொள்கையினால் தனது சிறுவயது முதல் தனது தந்தையுடன் இணைந்து தமிழ் உணர்வினால் ஈர்க்கப்பட்ட இலங்கை இந்திய பத்திரிகை தொடர்பாளர் திரு மணவை அசோகன் அவர்கள் மேற்கொண்டுள்ள அதேவேளை, கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்கு பொறுப்பான திரு எஸ். ஆனந்த் இரத்தினம் அவர்கள் இந்நிகழ்வை தொகுத்து வழங்குவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக