ஞாயிறு, 8 ஜூலை, 2018

“வகவம்” அமைப்பிலிருந்து விலகிக் கொள்கிறார் மேமன்கவி

“வகவம்” கலை இலக்கிய அமைப்பு, தன் கொள்கையிலிருந்து தடம்புரள்வாதக் கூறி, பிரபல எழுத்தாளரும் கவிஞரும் பன்னூலாசிரியருமான மேமன்கவிஅவ்வமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாகவும், இனிமேல் வகவத்தின் எந்தவொரு செயற்பாட்டிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

2018 ஆம் ஆண்டு 29.ந்திகதி அன்று நடந்த 48 வது வகவ பௌர்ணமி கவியரங்கில்-
தமிழ்த்தென்றல் அலி அக்பர் அவர்களால்,
வலம்புரி கவிதா வட்டத்துடன் நல்லுறவு கொண்டிருந்த, வலம்புரி கவிதா வட்டத்தின் வளர்ச்சிக்கு அனுசரணையாக இருந்த, வகவத்திற்கு எந்தவொரு தீங்கு செய்யாத, இலக்கியப்புரவலர் அல்ஹாஜ் ஹாஸிம் ஒமரை அவர்களைத் தாக்கி
வகவ மேடையில் பயன்படுத்திக் கவிதை வாசிக்கப்பட்டதும், அவ்வாறான கவிதை வாசிக்கப்பட்ட பொழுது வகவத்தலைமையால் அக்கவிதை தடுக்கப்படாமையும், வகவ மேடையில் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட வகவத்லைமை அனுமதித்தமையும் , வகவ வளர்ச்சியைப் பாதிக்கும் செயற்பாடுகளாக நான் கருதியமையாலும், வகவ பொன் விழா (50 கவியரங்கு) கவியரங்கைப் பிரமாண்ட முறையில் செய்வது என்ற வகவ செயற்குழுவின் தீர்மானத்திற்கு மாறாகவும், வகவ பொன்விழா கவியரங்கைப் பிரமாண்ட முறையில் ஏற்பாடு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் 27.06.2018 அன்றைய கவியரங்கை நடத்துவதில்லை என ஆலோசிக்கப்பட்ட பின்னும் ,
அதற்கு மாறாக வகவத் தலைமையின் தன்னிச்சை முடிவின் படி 27.06.2018 அன்று 50வது கவியரங்கை நடத்தியமையும் , 27.06.2018 அன்று கவியரங்கை வகவ செயற்குழு தீர்மானிக்காத வகையில் 27.08.2018 பொன்விழா கவியரங்குக்கு முன்னோடிக் கவியரங்காக நடத்தியமையும், வகவத்தின் வளர்ச்சியினைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எனக் கருதியமையாலும்,
இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் வகவத்தின் எந்தவொரு செயற்பாட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிப்பதோடு. இன்று முதல் கடந்த நாட்களில் வகவத்தில் நான் வகித்த சகல பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேமன்கவி
08.07.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக