வியாழன், 19 ஜூலை, 2018

அனைத்துக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் அணி செய்யப் போகும் நூல் அறிமுக விழா!!

சிரேஷ்ட ஊடகவியலாளர், நண்பர் சுஐப் எம் .காசிம் எழுதிய "வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்" என்ற நூலின் அறிமுக விழா எதிர்வரும் திங்கட்கிழமை 23 ம் மணிக்கு அக்கரைப்பற்றில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு சிறப்புச் செய்ய பலர் அழைக்கப்பட்டிருந்தாலும் விசேடமாக .மூன்று பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளக் கூடியதாக விழா ஏற்பாடு செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதுடன் மகிழச்சியையும் தருகிறது.
கெளரவ அதிதிகளாக வேதாந்தி சேகு இஸ்ஸதீன் , முன்னாள் இராஜாங்க
அமைச்சர் எம்.ரி ஹசன் அலி , நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் , ஏ .எல் .எம். நசீர் கலாநிதி எம் எஸ் எம் இஸ்மாயில்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரபைட் நிறுவன தலைவருமான எம் .ஏ .அப்துல் மஜீத் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம் .எஸ் .உதுமாலெவ்வை ,கே .எம் .அப்துல் ரசாக், எம்.ஏ .எம் .அமீர் , உட்பட பலர் கலந்து கொள்கினறனர்.

- Siddeque Kariyapper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக