வியாழன், 12 ஜூலை, 2018

மஞ்சற் காவியும் கொஸ்தாபல் கொலையும்

கடந்த 2018-07-10ம் திகதி ரத்னபுர கல்லெந்த என்ற இடத்தில் அமைந்துள்ள விகாரையிலிருக்கின்ற பௌத்த மத குருவுக்கெதிராக நீதிமன்ற்த்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்றுவதற்காக விகாரைக்கு வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தரை புனித பூமிக்குள் வைத்து கழுத்து நெறித்தும், கத்தியால் குத்தியும் பயங்கரமாகப் படுகொலை செய்துள்ளார் அந்த விகாரையின்
முப்பத்தேழு வயதான மஞ்சற் காவி வில்லன். பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையை அது தொடர்பான விசாரணைக்கு அங்கு வந்த பொலிஸ் டீமுக்கு கைக்குண்டை வீசவும் முயன்றிருக்கின்றார் அந்த டெரர் மிக்க தேரர்.
இதே சம்பவத்தை சற்று மாற்றி யாராவது ஒரு முஸ்லிம் மௌலவி இப்படி பள்ளிவாயலில் வைத்து தன்னைக் கைது செய்யும் நோக்கில் பிடியாணையை நிறைவேற்ற வந்த பொலிஸ் உத்தியோகத்தரை இப்படி கோல்ட் ப்ளடட் மேர்டர் செய்திருந்தால் அது……………….
தனி நபர் குற்றம் தனி நபர் பிரச்சினை என்பதெல்லாம் போய் உடனடியாக அது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இந்த ஊழல் மிக்க கருப்பு லங்காபுரியில் பொருள் கோடல் செய்யப்பட்டிருக்கும்.
குற்றம் செய்தவர் மௌலவியாதலால் இலங்கையின் அனைத்து மத்ரசாக்களும் அரபுக் கலாசாலைகளும் தலிபானிய, ஐஸ்ஐஸ் ட்ரேட் மார்க்குகள் குத்தப்பட்டு அவையணைத்தும் நேஷனல் செக்கியுரிட்டி டிவிஷன்களின் சீசீ கேமராக்களின் கீழ் உடனடியாகக் கொண்டு வரப்படும்.
பாரம்பரிய மத்ரசாக்களையும் நழீமிய்யா போன்ற அரபுக்கலாசாலைகளையும் உடனடியாக மூடுவதற்க அரசு ஆவண செய்ய வேண்டுமென்ற கோஷத்தோடு ஞானசார தேரர் தலைமையில் நாடாளாவிய ரீதியில் தெருப் பொறுக்கிப் போராட்டங்கள் தாம் தூமென்று வெடித்துச் சிதறும். இது ஒன்று போதும் முஸ்லிம் அரபுக்கலாசாலைகளின் அடி மடியில் லேசாக கை வைத்து கறுவறுப்பதற்கு.
கொல்லப்பட்டது பொலிஸ் உத்தியோகத்தர் என்பதனால் நாட்டில் உள்ள எல்லாப் பொலிஸ் நிலையத்து சிங்கள கொஸ்தாபல் முதல் ஐஜீபீ வரை முஸ்லிம் சமூகத்தோடு பூர்வ ஜென்ம பகையை உடல் முழுக்க பூசி கிரி வதத்துக்கு தயாராவர்கள். இதன் பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு தேவைக்கு செல்லுகின்ற முஸ்லிம்களுக்கு புது விதமான ட்ரீட்கள் அங்கு கிடைக்கலாம். அங்கு ஒரு வகையான நக்கல் நையாண்டி வைதல் கொய்தல் செய்தல் என்று டிசைன் டிசைனாக நிறைய எதிர்பார்க்கலாம்.
முழு முஸ்லிம் சமூகமும் லோ என்டர் ஓர்டரை மீறி நடக்கின்ற பக்கா லே லெவல் லோக்கல்ஸ்களாக காட்டப்படுவர்.
முழு முஸ்லிம் சமூகமும் ஹார்ட் கோர் கிரிமினல்களாக (Hard Core Criminals) தேசமெங்கும் நச்ச விதையை திட்டமிட்டு பயிர் செய்த கொண்டிருப்பார்கள்.
எல்லா மெகா லெவல் குறற்ங்களின் போதும் சைலன்ட் மோடிலிருந்த ஊழல் பெருச்சாளிகளான சோ கோல்ட் மக்கள் குரல்கள் பாராளுமன்றத்தில் இப்போதுதான் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்க பற்றி ஆயிரம் டெஸிபலில் அலறிக் கொண்டிருப்பார்கள்.
இரத்தினபுரியில் இன்னுமோர் திகன என்று டைட்டிலில் வன்முறையால் ரத்த சரித்திரப் படத்தை காடையர்கள் சில சிங்கள அரசியல்வாதிகளின் முழு விளம்பர அனுசரணையில் ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.
இரத்தினபுரி பூமியின் முஸ்லிம் ஏரியாக்கள் இரத்த பூமியாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கும்.
எல்லா திட்டமிட்ட வன்முறைகளும் கிளைமேக்ஸ் காட்சிக்கு வந்து வணக்கம் சுபம் மீண்டும் வருக என்ற என்ட் கார்டு போட்ட பின்னர் சட்டம் ஒழுங்கைப் பேண கால வரையரறையற்ற ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவார்கள்.
ராணுவம் பொலிசாரின் அட்டகாசமான மேற்பார்வையில் ஆங்காங்கு சில முஸ்லிம் பிரதேசங்களில் இடியுடன் கூடிய அடை மழை பெய்யக் கூடும்.
வழமை போல எது நடந்தாலும் தண்டனையை ஏற்றுக் கொண்ள்ளுவதற்கென்றே இருக்கின்ற பல பள்ளிவாயல்கள் “அன்டர் அட்டேக்” என்ற செய்திக்கு உள்ளாகும்.
இனத்துவேஷத்தால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்ற மீடியாக்கள் இலங்கை முஸ்லிம்களை சர்வதேச பயங்கரவாதிகளாகவும், ஐஸ்ஐஸ்க்களாகவும் அடையாள வகுப்பு நடாத்திக் கொண்டிருப்பார்கள்.
முக நூலில் எல்லாரது டைம் லைனும் இரத்தினபுரி கலவரங்கள் பற்றி ஆகக் குறைந்தது திருக்குறள் சைசிலாவது ஸ்டேடஸ்களை கவ்விக் கொண்ட அலையும்.
இத்தனை களேபரத்துக்கிடையிலும் ஹக்கீம் ரிஷாத் போன்றவர்கள் நானா நீயா என்று அரைக்கிறுக்கு அரட்டை அரங்கங்களை நடாத்திக் கொண்டிருப்பார்கள்……அவர்களது அக்மார்க் அல்லக்கைகள் ஆள் மாறி ஆள் மாறி ஜால்ராக்களை ஓட்டிக் கொண்டும், ஆள் மாறி ஆள் மாறி அடுத்தவர்களை தூற்றிக் கொண்டும் சுய மைதுன சுகம் கண்டு கொண்டிருப்பார்கள்
இந்தப் பிரச்சினையில் மஹிந்த மற்றும்; இன்னோரன்ன இத்யாதிகளின் பைலட் லெவல் ஊழல்கள். பயங்கரக் குற்றங்கள். மத்திய வங்கி பிணை முறி பிக்காளித்தனங்கள். விஜயகலா மேமின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரைகள், கொலை வாசிகளான விலைவாசிகள், நள்ளிரவு நேரத்து விலையேற்றங்கள், என்று ஏற்கெனவே அம்னீஷியா நோய்க்கு ஆளான இந்த தேசத்தின் மிஸ்டர் இன்னஷன்ட் ஜெனரல் பப்ளிக் நோயாளர்கள் வழமை போல எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் லெவலில் கஞ்சா அடித்தவன் கணக்கில் செம போதையில் இரு விழி செருகிக் கிடப்பார்கள்.
எப்படியோ அல்லாஹ் காப்பாத்தி விட்டான் வாப்பா
கிண்ணியா சபருள்ளாஹ்2018-07-12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக