புதன், 18 ஜூலை, 2018

கோத்தபாய, ஜனாதிபதி அபேட்ஷகர் என பெயர் குறிக்கவில்லை... மஹிந்தவின் அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்றில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி ஊடகச் செய்தியொன்று இணையங்களில் வலம் வருகின்றது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிவித்தலொன்று ஊடகச் செய்தியென்ற பேரில் போலி ஆவணமொன்று நேற்று, அதாவது 2018 ஜூலை மாதம் 17 ஆம் திகதி குறிப்பிட்டதொரு குழுவினரால்
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதென்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அந்த போலியான ஆவணத்தில், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி அபேட்சகராக கோத்தபாய ராஜபக்ஷவை உத்தியோகபூர்வமாக பெயர் குறித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அபேட்சகராக இதுவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எந்தவொரு நபரினதும் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை நாங்கள் இத்தால் அறியத்தருகின்றோம். முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணம் ஒன்று மேற்கொள்ளும்வரை பார்த்திருந்து இக்குழுவினர் இக்கைங்கரியத்தைச் செய்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஜனாதிபதி அபேட்சகராக பெயர் குறிப்பிடப்படும்போது, அது ஊடகச் செய்தியாக வெளியிடப்படமாட்டாது எனவும், அதனை மிக முக்கியமான இடமொன்றில் தானே வெளியிடவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
“2020 ஜனாதித் தேர்தல்” என்ற தலைப்பிலேயே அந்த போலி ஆவணம் உள்ளது. என்றாலும், 2020 இல் இந்நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இல்லை. அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தல் 2019 இலேயே நடைபெற வேண்டும். எங்கள் யாப்பின்படி 2019 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இதனை முதன் முதலில் பொதுமக்களுக்கு ஊடகச் செய்தியொன்றின் மூலம் இதற்கு முன்னர் அறிவித்தவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
ரொஹான் வெலிவிட்ட
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக