வியாழன், 12 ஜூலை, 2018

சர்வ மத ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கான செயலமர்வு

மேல்மாகாணச் சபை உறுப்பினர் அல்ஹாஜ் A.J,முஹமட் பாயிஸ் அவர்களின் சுமார்  ஐந்து லட்ச நிதி ஒதுக்கீட்டில் எதிர்வரும் 21.07.2018 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பு 15 முகத்துவார வட-கொழும்பு இந்து பரிபாலனச் சங்க மண்டபத்தில் நடைபெறும்,சர்வமத செயலமர்வில் பெளத்தஇந்துகிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் ஞாயிறு பாடசாலைகளின் ஆசிரியர்கள் சுமார் 500 பேர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இச்செயலமர்வில் பிரதம அதிதியாக மேல்மாகாணச் சபை உறுப்பினர் அல்ஹாஜ் A.J,முஹமட்பாயிஸ் அவர்கள் கலந்து கொள்வதோடுசிறப்பு அதிதிகளாகக்  கொழும்பு  பிரதேசச்  செயலாளரும்கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலைகளின் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ்  M.R.M ஸறூக் மற்றும் சிலரும் கலந்து  கொண்டு  சிறப்பிக்க இருக்கிறார்கள் இச்செயலமர்லில் கலந்து கொள்ளும் சகல  ஞாயிறு பாடசாலைகளின்  ஆசிரியர்களுக்கும்  சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இச்செயலமர்வினைக் கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனமும்  கொழும்பு பிரதேசச் செயலாளர் அலுவலகமும் இணைந்து நடத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக