திங்கள், 18 ஜூன், 2018

இனிப் பிறை கண்டு அறிவிப்பதை முஸ்லிம் சமய விவகார அமைச்சே ஏற்கும்

ஷவ்வால் மாத தலைப்­பிறை தொடர்­பாக எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் சமூ­கத்தில் பல எதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இவற்­றுக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பு முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சையே சார்ந்­துள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் காலங்­களில் பிறை சம்­பந்­த­மான தீர்­மா­னங்­களை அமைச்சே மேற்­கொள்ளும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

ஷவ்வால் மாத தலைப்­பிறை தொடர்­பாக சமூ­கத்தில் ஏற்­பட்­டுள்ள பிள­வுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடி­வெள்­ளி’க்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்;

“கடந்த காலங்­களில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு அமைச்சு இல்­லா­தி­ருந்த காலப்­ப­கு­தியில் பெரிய பள்­ளி­வாசல் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா என்­பன இணைந்து பிறை தொடர்­பான தீர்­மா­னங்­களை மக்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தன. ஆனால் தற்­போது முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு அமைச்சு உள்­ளது. எனவே இந்த அமைச்சே பிறை காணும் விவ­கா­ரத்தை கையேற்கும்.

அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய விவ­கார திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் தீர்­மா­னங்­களை வெளி­யிடும் அதி­கா­ரி­யாக செயற்­ப­டுவார்.

கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலும் தலைப்­பிறை பார்க்­கலாம். ஆனால் தீர்­மா­னங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ளரே வெளி­யி­டுவார். பிறை பார்க்கும் குழுவில் பெரிய பள்­ளி­வாசல் பிர­தி­நிதி, சூரா சபை பிர­தி­நிதி, உலமா சபை பிர­தி­நி­திதி, வான­சாஸ்­திர விஞ்­ஞா­னிகள் அடங்­கி­யி­ருக்­கலம். ஆனால், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சே சகல பொறுப்­பு­க­ளையும் கையாளும்.

இம்­முறை ஷவ்வால் மாத பிறை தீர்­மா­னிக்கும் விட­யத்தில் நடந்­தது என்ன? ஏன் குள­று­ப­டிகள் ஏற்­பட்­டன என்­பது தொடர்பில் விசா­ர­ணை­யொன்­றினை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விசா­ர­ணையின் பின்பு எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தவ­றுகள் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்கு வாய்ப்பு ஏற்­படும்.

முஸ்லிம் சமய விவா­க­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு அமைச்சு இல்­லா­தி­ருந்த காலத்தில் பெரிய பள்­ளி­வாசல் பொறுப்­பாக இருந்து இந்தப் பணியை முன்­னெ­டுத்­தி­ருக்­கலாம். ஆனால், தற்­போது முஸ்லிம் சமய விவ­கா­ரத்­துக்கு தனி­யான அமைச்­சொன்று இருக்­கி­றது. எனவே இந்த விவ­கா­ரத்தை எதிர்­வரும் காலங்­களில் முஸ்லிம் விவ­கார அமை­சசே கையாளும்.

சமூ­கத்தில் பிள­வு­களை உரு­வாக்க ஒரு­போதும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இவ்­வி­வ­கா­ரத்தில் எமக்குள் நாம் ாம் பிரச்சினைப்பட்டுக் கொள்வது ஒருபோதும்­ அனுமதிக்கப்படாது.

பல்வேறு சமூக நல அமைப்புகளும் புத்திஜீவிகளும் பிறைப் பார்த்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளார்கள். இந்த ஆலோசனைகளும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளன என்றார்.

மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

- ஏ.ஆர்.ஏ. பரீழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக