செவ்வாய், 5 ஜூன், 2018

எஸ்எல்ரீஜே வெலிகம கிளையில் உளவுத்துறையினர் திடீர் சோதனை!

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் வெலிகம கிளைக்கு இன்று (05) உளவுத்துறையினர் வருகை தந்து திடீர் விசாரணை நடத்தியதாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் வெலிகம கிளை (மதுராப்புரயில் இயங்குவது) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினருடன் முறுகலில் உள்ள ஒரு சிலரே, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் வெலிகம கிளையினர் இனவாத இயக்கம் என்று கொழும்பு உளவுத்துறையினருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்தே உளவுத்துறையினர் திடீர் விசயம் செய்து, பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

உளவுத்துறையினரின் பரிசோதனைக்குஎஸ்எல்ரீஜே வெலிகம கிளையினர் முழு ஒத்துழைப்பு நல்கியுள்ளர். விசாரணையில் தகவலில் உண்மைத் தன்மை இல்லையென்பது உளவுத்துறையினருக்குத் தெளிவாகியுள்ளதோடு, அவ்வமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தன் மூலம், அவர்களின் சமூகப் பணிகள் பற்றியும் உளவுத்துறையினர் தெரிந்து கொண்டுள்ளனர்.

எதுஎவ்வாறாயினும், விசாரணைக்காக வருகை தந்த உளவுத்துறையினர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் சேவைகைளைப் பாராட்டி, மேலும் இவ்வாறான அரும்பணிகளைச் செய்வதற்கு ஆசியும் வழங்கிச் சென்றுள்ளனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக