வியாழன், 14 ஜூன், 2018

இந்தோனேசியாவில் இன்று பிறை தென்பட்டது

ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாதத் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு ஜகார்த்தாவில் சமய விவகார அமைச்சில் நடைபெற்றது இன்று 2018-06-14 மாலை மேற்கு இந்தோனேசிய நேரம் 17:00 மணிக்குத் தொடங்கியது. 

இதில் இந்தோனேசியாவின் சமய விவ
கார அமைச்சர் லுக்மான் ஹகீம் ஸைபுத்தீன், இந்தோனேசிய உலமா சபைத் தலைவரும் ஷரீஆ அவைத் தலைவருமான மஃரூப் அமீன், இந்தோனேசியப் பெரிய பள்ளிவாசலான இஸ்திக்லால் மஸ்ஜிதின் தலைமை இமாம் நஸருத்தீன் உமர், இந்தோனேசிய வானியல், அண்டவெளியியல் மையத் தலைவர் அலி தாஹிர், இந்தோனேசியா முழுவதிலுமுள்ள இஸ்லாமிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், நட்பு நாடுகளின் தூதர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தோனேசியா முழுவதிலுமுள்ள 34 மாகாணங்களில் பிறை பார்க்கப்பட்டதாகவும் பல்வேறு மாகாணங்களிலும் பிறை தென்பட்டதாகவும் இதனடிப்படையில் ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாதத்தின் 1 ஆம் நாள் 2018-06-15 வெள்ளிக் கிழமை இடம் பெறுவதாகவும் இந்தோனேசிய சமய விவகார அமைச்சர் லுக்மான் ஹக்கீம் ஸைபுத்தீன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக