வெள்ளி, 15 ஜூன், 2018

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் நாளை பெருநாள் கொண்டாடும்!

இலங்கையில் சில பகுதிகளில், பிறை கண்டமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகி உள்ளதை ஸ்ரீலங்காதௌஹீத் ஜமாஅத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பில் அவர்கள் நாளை (15) பெருநாள் கொண்டாடுவது தொடர்பில் சுற்றறிக்கையொன்றை தங்களது முகநூல் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளனர்.

அந்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்
சுற்றரிக்கை 34/2018
திகதி 14-06-2018
சவ்வால் மாத தலை பிறையை உறுதிப்படுத்தும் அறிவிப்பு!
இன்று 14/06/2018 ஆம் திகதி இலங்கையில் சில பகுதிகளில் பிறை பார்த்ததை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது.
குறிப்பாக பலகதுரை மற்றும் மாவனல்லை ஆகிய இடங்களில் உறுதியான சாட்சியின் அடிப்படையில் பிறை பார்த்த தகவலை ஏற்றுக் கொண்டு நாளைய தினம் பெரு நாள் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
எம்.எச்.எம் ரஸான்
செயலாளர்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக