திங்கள், 11 ஜூன், 2018

நண்பனுக்காக நோன்பு நோற்கும் (பிறமத) பிஞ்சு உள்ளம்

நேற்று மாலை என்னுடைய மகன் சூாிய
சொன்னான், நான்
நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று
சூரிய சாப்பாட்டு ராமன் பசித்த இருப்பவன்
அல்ல, அவன் தமாஷாக சொல்லுகிறான் என்று நான் மனதினில் எண்ணிக் கொண்டேன்
அவன் மீண்டும், மீண்டும் கூறிய போது, நான் அவனிடம் கேட்டேன், சூரிய நீ எதற்காக நோன்பு நோற்கின்றேன் என்று
சொல்லுகின்றாய்.
என் வகுப்பு அறையில் எனது அருகில் இருக்கும் கூட்டாழி முஹம்மது நோன்பு இருக்கின்றான். உமிழ் நீர் கூட தொண்டைக்குள் இறக்காது நோன்பு
பிடிக்கின்றான்.
மற்றும் றமழானையும் அதன் பயன்களை குறித்தும் எல்லா விஷயங்களையும் விளக்கி தந்தான்.
நானும் நாளை நோன்பு இருக்கின்றேன் என்றான்.
நான் அதை பெரிதாக நினைக்கவில்லை, சும்மா சொல்கிறான் என நானும் என் மனைவியும் எண்ணினோம். ஆனால் நாங்கள் ஆச்சாரியம் வியப்பும் படும் வகையில், அலாரம் வைத்து விடியல் காலையில் முஸ்லிம் பள்ளியில் பாங்கு ஒலிக்கும் முன்பு எழுந்து பல் துலக்கி கொஞ்சம் முந்திரி பருப்பும், தண்ணீரும் குடித்து நோன்பு வைத்து கொண்டான்.
என் மகன் பசித்திருந்து, உமிழ் நீர் கூட இறக்காமல் நோன்பு வைத்தது எங்களுக்கு
அற்புதமும், ஆச்சாரியமும், அபிமானமும் ஏற்பட்டது .
அவன் பள்ளிகூடத்திற்கு சென்று மாலை வீடு
திரும்புவதற்கு முன்பே , மகனுக்கு ஸர்ப்பிரைஸ் ஆக இருக்கட்டும் எனக் கருதி அவனுக்கு நாங்கள் மூன்று பேறும் நோன்பு துறப்பதற்கான எல்லா பொருள்களும் சமைத்து மேசை மீது பரத்தி வைத்து முஸ்லிம் பள்ளியில் பாங்கொலி கேட்டபோது சூரிய நோன்பு திறந்தான்.
சூரியவிடம் உன் பள்ளி தோழன் இந்த றமளான் மாதத்தைப்பற்றி வேறு என்ன கூறினான்.
முஹம்மது சொன்னான். இயந்திரங்களுக்கு
நாம் அவ்வப்போது நிறுத்தி சுத்தம் செய்து அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். அது போல உடம்பிலுள்ள உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டாமா?
கடவுளின் காருண்ணியத்தால இம்மண்ணில் பெய்து இறங்குகின்ற மாதமாகும்.
புண்ணியங்கள் செய்வதற்காக இறைவன்
தந்த பூக்காலமாகும்.
பசியின் கொடுமையை அறியும் மாதமாகும்.
நம்முடைய ஆராதனை
கொண்டு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்தும். ஏழைகளுக்கு அவர்களுக்குள்ள ஏழைகளின் வரியான ஜக்காத் கொடுப்பதும்
தான தர்மங்கள் செய்து இறைவனின் அன்பை பெறுவதுமாகும்.
கள்ளம கபடமற்ற வெள்ளை உள்ளத்தின்
வார்த்தைகளை கேட்ட தாய் தந்தையர்கள்
மகிழ்ந்தனர்.
தன் குழந்தை மத துவேஷ பாதையில் செல்லாது மத சினேகத்தை நாடுகின்றான் என மகிழ்ந்தனர், பெருமைப்பட்டனர்.
“இஸ்லாம் வாளால் பரப்பட்ட மார்க்கமல்ல,
அழகிய வழிமுறகளால் வளர்ந்தோங்கிய மார்க்கம்”

(குறித்த நல்லிதயத்தின் தந்தை முகநூலில் எழுதிய பதிவு இது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக