புதன், 6 ஜூன், 2018

கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அரங்கில் வகவ 49 வது கவியரங்கம்

வலம்புரி கவிதா வட்டத்தின் 49 வது கவியரங்கு 29-5-2018 அன்று காலை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.     மறைந்த  கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை    அரங்கில் நடைபெற்ற நிகழ்வு வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் தலைமையில் நடைபெற்றது.

வகவ கவிஞர்  வதிரி சி.  ரவீந்திரன் 49 வது கவியரங்கிற்கு தலைமை தாங்கியதோடு அரங்க நாயகர் காரை சுந்தரம்பிள்ளைப் பற்றியும் சிறப்புரையாற்றினார். கவிஞர் ஈழகணேஷ் வரவேற்புரை வழங்கினார்.

அண்மையில்  நம்மை விட்டு மறைந்த தமிழகத்தின் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மற்றும்  நாவலர் மன்றத் தலைவர் கருணை ஆனந்தன்    ஆகியோர்   நினைவு கூரப்பட்டனர்.  கருணை ஆனந்தன் பற்றி டாக்டர் தாஸிம் அகமதும்,    பாலகுமாரன்    பற்றி கவிஞர் மேமன்கவியும் சிறு குறிப்புகளை வழங்கினர்.

  
கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றிய கவிஞர் வதிரி சீ . ரவீந்திரன் அவர்கள், 'யாழ்ப்பாண மாவட்டம்காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர்தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும்இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணிகல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன்வித்துவான் பொன் முத்துக்குமாரன்வித்துவான் க. வேந்தனார்பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும்தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார்ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழிசமஸ்கிருத மொழிபாளி மொழிசிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.
1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்புசென் யோசேப் கல்லூரிகேகாலைஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம்கே-மாவனல்ல சாகிரா கல்லூரி,யாழ்ப்பாணம்தேவரையாளி இந்துக் கல்லூரிஒஸ்மானியாக் கல்லூரியாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும்காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும்பின்னர்பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும்தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்)யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்)யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.

புகைவண்டி என்ற இவரது முதலாவது கவிதை அழ. வள்ளியப்பாவில் பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும்'கண்ணன்எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின. அதனைத் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின. இவரது கவிதை நூல்கள்        தேனாறு (1968) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது,   சங்கிலியம் (1970) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது,       தவம் (1971),      உறவும் துறவும் (1985) ,             பாதை மாறியபோது (1986) காவேரி (1993) ஆகியன. பல ஆயு;வு நூல்களையும் எழுதியுள்ளார்.       ஈழத்து இசை நாடக வரலாறு (1990) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது. இந்து நாகரிகத்திற்கலை (1994) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது.        நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது. இவ்வாறு பல நூல்களை எழுதினார். பல பரிசுகளையும் வென்றுள்ளார்.

பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும்,                யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசுஅகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. இன்னும் பல பரிசுகள்

யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக்கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருதும் இவருக்குக் கிடைத்தது.
யாழ்ப்பாண மாநகரசபை மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும்சான்றிதழும்பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்என கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்களின் சிறப்புகளை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.


கவியரங்கிற்கும் கவிஞர் வதிரி சீ. ரவீந்திரனே  தலைமை தாங்கினார்.   49 வது கவியரங்கில்  கவிஞர்கள் கலைவாதி கலீல்,   எம். பிரேம்ராஜ்,    எம்.ஏ.எம். ஆறுமுகம்,  தாஜ்மஹான்,  அப்துல் லத்தீப்எம். பாலகிருஷ்ணன்,   கே. லோகநாதன்மஸீதா அன்ஸார்,   வை. சுசீலா,    கிண்ணியா அமீர் அலி,  வெலிமடை ஜஹாங்கீர்,எம். வஸீர்இரா. தில்லைராஜன்பாயிஸா ஹமீட்அப்துல் அஸீஸ்எஸ்.  தனபாலன்,  கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்,  மேமன்கவி      ஆகியோர் கவிதை பாடினர்.


நிகழ்வில் அரங்க நாயகர் மறைந்த கவிஞர் காரை எஸ்.  சுந்தரம்பிள்ளை அவர்களின் புத்திரர் மற்றும் மருமகள் திரு. திருமதி பூங்குன்றன்     ஆகியோரும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும். மேலும் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி,  த.மணி,     ரவூப் ஹஸீர்ஏ.எஸ்.எம். நவாஸ்,  லோ. கோகுல்,  , ரி.என். இஸ்ராஸுல்பிகா எம்.  ஸாலிஹ் ஸினான்செரீன் சலீம்,   மலாய்கவி டிவாங்ஸோ,  ஐ.எல்.எம். ஆஷிக்எம்.  மகேஸ்வரன்    போன்ற பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக