புதன், 20 ஜூன், 2018

மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விருது விழா-2018


மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்குமுகமாக கொடகே நிறுவனமும் இலங்கை வானொலியும் இணைந்து விருது வழங்கும் விழா எதிர்வரும் 2018 - ஜுன் மாதம் 23ஆம் திகதி பி. ப. 12.00 மணிக்கு பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ கரு ஜெயசூரிய அவர்களின் தலைமையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன குமாரதுங்க உள்ளக அரங்கில் நடைபெறும்.
இவ்விழாவில் பல மூத்த சிங்எள எழுத்தாளர்களுடன் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.
அந்த வகையில் இவ்வருட கொடகே யின் மூத்த எழுத்தாளர்கள் கெளரவிக்கும் விழாவில், திருமதி. புர்கான் பீ. இப்திகார், திரு. மு.. சிவலிங்கம், திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) ஆகியோர் கெளரவிக்கப்படுவார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக