சனி, 16 ஜூன், 2018

14.06.2018 பிறை தொடர்பான ஆய்வு அறிக்கை!

- எம் .என் முஹம்மத் (ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்))
அறிமுகம்.
இந்த ஆய்வு அறிக்கையின் நோக்கம் எதிர்காலத்தில் பிறை தொடர்பாக தோன்றும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு ஆகும்.இந்த ஆய்வு அறிக்கை தகவல் திரட்டு மூலம் பெற்றுக்கொண்ட தரவுகளை அடிப்படையாக்க் கொண்டது எந்த உபகரணங்களும் பாவிக்கப்படவில்லை .இந்த ஆய்வு அறிக்கையை ஏற்பதற்கும் ,நிராகரிப்பதற்கும் சகலரிற்கும் உரிமை உண்டு. இவ்வளவு அவசரமாக எனக்கு ஆய்வைப் பூரணப்படுத்துவதற்கு தரவுகளை அனுப்பிவைத்த முக நூல்நண்பர்களிற்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரவேசம்
சந்திரன் அல்லாஹ்வின் ஒரு உயர்படைப்பாகும் .சந்திரன் புவியைச் சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாட்கள் எடுக்கும் .என்றாலும் புவி சூரியனை சுற்ற எடுக்கும் நேரம்,புவியின் தற்சழற்சிகைக்கு எடுக்கும் காலம் என்பனவற்றை வைத்து 48 மணி நேரங்களையும் இனைநத்து சந்திர மாதம் என்பது அண்ணளவாக 29.53 நாட்களாகும் ,எஞ்சும் 0.5 நாட்கள் இனைந்து ஒரு நாள் கூடுவதால் 30 நாட்கள் உருவாகும்.சந்திரன் புவியைச் சுற்றி வரும் போது அதன் அமைவிற்கு ஏற்ப எமக்கு தெரியும் பகுதி மாறுபடும். இதனால் சந்திரன் பல்வேறு தோற்ற வடிவங்களைப் பெறுகின்றன .இதன் ஆரம்ப வடிவங்களையே நாம் பிறை என்கின்றோம்.
ஆய்வு அறிக்கை .14.06.2018 அன்று இலங்கையில் வெற்றுக்கண்னிற்கு பிறை தென்படுவது மிகவும் கடினமானது ,என்றாலும் Horizon இற்கு மேல் பிறை வருவதால் ,இலங்கை வளிமண்டல திணைக்களம் அன்றய தினம் வெற்றுக் கண்னிற்கு பிறை தென்படும் என அறிவித்து இருந்தது ஆனால் தொலைகாட்டியின் மூலம் இலகுவாக காணலாம் இலங்கை வானில் 39 நிமிடங்கள் பிறை இருந்தால் மிகவும் இலகுவாக உயர்ரக தொலைகாட்டிகள் மூலம் அவதானித்து இருக்கலாம் .இலங்கை கிழக்கில் வெற்றுக் கண்மூலம் பிறை தென்படுவது அன்றைய தினம் அசாத்தியமானது .என்றாலும் இலங்கையின் மேற்கு ,மற்றும் வட மேற்கு பகுதியில் தென்பட்ட பிறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இந்தவகையில் பின்வரும் ஆய்வு முடிவுகளை முன்வைக்கின்றேன்.
01.அக்கரைப்பற்று பிறை - நிராகிரிக்கப்படுகிறது காரணங்கள்
01.எனக்கு கிடைத்த தகவலின் படி பிறை கண்டதாகக் கூறும் நேரத்தில் வானில் பிறை இருக்கவில்லை.
02.கிழக்கு மாகாணத்தில் பிறை வெற்றுக் கண்னிற்கு புலப்படுவதற்கு அசாத்தியமானது .
02.பலகத்துரைப்பிறை - சாத்தியமானது பலகத்துரையில் பிறை கண்டவர்கள் அறிவித்துள்ள நேரம் பிறை Horizon இல் மறைவதற்கு உள்ள மட்டுமட்டாக உள்ள நேரமாகும். எனவே அந்த நேரத்தில் அவர்கள் காண்பதற்கான வாய்ப்பு ஏற்புடையது .
காரணங்கள்.
01.வளிமண்டல திணைக்களம் காண்பது சாத்தியமானது என அறிவித்துள்ளமை .
02.அவர்கள் கண்டதாகக் கூறும் நேரம் பிறை Horizon இற்கு மேல் மட்டுமட்டாக இருந்தது.
03.திஹாரியப்பிறை -சாத்தியமானது காரணங்கள் .
01 .அவர்கள் பிறை Horizon இல் மறைவதற்கு 3 நிமிடங்கள் முன் பிறை கண்டுள்ளனர்.
02.அவர்கள் ஒரு உயரமான மொட்டைமாடியில் கண்டுள்ள கோணம் எனக்கு கிடைத்த தகவல் படி சரியானது.
04.மன்னார் பிறை - ஏற்றுக்கொள்ளப்படுகிறது
காரணங்கள் .
01.அவர்கள் கண்டதாக கூறும் நேரத்தில் பிறை Horizon இற்கு மேல் இருந்தமை .
02.மன்னாரில் அவர்கள் பிறை பார்க்கும் நேரம் ஏனைய பிரதேசங்களை விட பிரகாசம் அதிகமானது .
03.மன்னார் வெற்றுக் கண்னிற்கு புலப்படும் வலயத்திற்கு அண்மையில் இருந்தமை.
04.மன்னாருடன் ஒரே புவியியல் வலயத்தில் உள்ள இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்திய நேரப்படி 7.15 இற்கு பிறை கண்டதை சர்வதேச வானிலை நிலையம் உறுதி செய்துள்ளமை .

05.மாவனல்லைப் பிறை போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.

இறுதி முடிவு- சாட்சியங்கள் உண்மை எனில் கண்ட பிறையை ஏற்கலாம்

பரிந்துரைகள்.
01.பிறைக்குழு தற்போதுள்ள நியதிகளை மட்டுமே தொடர்ந்தும் பயன்படுத்தும் எனின் வானவியல் தரவுகளைப் பயன்படுத்தக் கூடாது .(இவ்வாறான பிரச்சினைகள் தொடரும்)
02.பிறை பார்பதற்கு விரிந்த பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.
03.பிறைக்குழு தமது நியதிகளை மீள ஆய்விற்கு உற்படுத்த வேண்டும்.
04.பிறை பார்க்கும் ஒழுங்கு தொடர்பில் சமூகம் அறிவூட்டப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக