வெலிகமயில் சம்பவம்
வாகனத்தை நிறுத்தாமல், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை எடுத்துச்சென்ற வாகனமொன்று, இன்று (06) அதிகாலை வெலிகமையில் புரண்டுள்ளது.
மாத்தறையிலிருந்து பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி, பயணித்தவேளை பொலிஸார் வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
அவ்வேளை, வெலிகம புகையிரத நிலையத்திற்கு முன்பாக வாகனம் கட்டுப்பாட்டை மீறி புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
13 மாடுகளுடன் தடம்புரண்ட அந்த வாகனத்தில் இரண்டு மாடுகள் இறந்துள்ளன.
மீயல்லையைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான வாகனம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தப்பிக்கமுயன்ற சாரதி உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக