வியாழன், 24 மே, 2018

ஞானசார தேரர் குற்றவாளி: ஹோமாகம நீதிமன்றம் அறிவிப்பு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என, இன்று வியாழக்கிழமை ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து, ஞானசார தேரர் அச்சுறுத்தினார் என குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று ஹோமாகம நீதிவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே நீதிவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

இந் நிலையில் ஞானசார தேரருக்கான தண்டனையை எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிவான் கூறியதோடு, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் கைவிரல் ரேகையை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக