வியாழன், 31 மே, 2018

கொடகே தேசியத் தமிழ் ஆக்க இலக்கிய கையெழுத்துப் பிரதிகளுக்கானப் போட்டி-2018


கொடகே நிறுவனம் நாடாத்தும்  தமிழ் ஆக்க இலக்கிய கையெழுத்துப் பிரதிகள் போட்டிக்கெனப் பிரசுரிக்கப்படாத நாவல். சிறுகதைத்தொகுப்புகவிதைத்தொகுப்புக்கான கையெழுத்துப் பிரதிகள் கோரப்பட்டுகின்றன.

நாவல்

போட்டிக்கு அனுப்பப்படும் நாவலுக்கான கையெழுத்துப் பிரதி 160 பக்கங்களுக்கு குறையாமலும்300 பக்கங்களுக்கு அதிகரிக்காமலும் இருத்தல் வேண்டும்.
பரிசுத் தொகை ரூபா 100,000.00


சிறுகதைத்  தொகுப்பு

சிறுகதைத் தொகுப்புக்கான  கையெழுத்துப் பிரதி 10 சிறுகதைகளுக்கு குறையாமலும்15 கதைகளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். 80 பக்கத்துக்குக் குறையாமலும் 240 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

பரிசுத் தொகை ரூபா 25000.00

கவிதைத் தொகுப்பு
கவிதைத் தொகுப்புக்கு அனுப்படும்  கையெழுத்துப் பிரதி50 கவிதைகளுக்கு குறையாமலும்,75 கவிதைகளுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 56பக்கத்துக்குக் குறையாமலும் 160 பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

பரிசுத் தொகை ரூபா 25000.00

எல்லா பிரதிகளும் 1-8 (A5) அளவில் இருத்தல்  வேண்டும். பிரதி 12 Point Baamini Font யில் கணனியில் தட்டெழுத்துச்  செய்யப்பட்டு அனுப்பப்படல் வேண்டும்.

மேற்படி போட்டிகளுக்கு அனுப்பபடும் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளடங்கும் எந்தவொரு ஆக்கமும் ஏலேவே எந்த வழியிலும் பிரசுரமாகத ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.

எந்தவொரு பிரதியின் உள்ளடக்கம் இலங்கை தேசிய சமூகக் கலாச்சாரத்தைப் பாதிக்காத வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.

கணனி தட்டச்சுச் செய்யப்பட்டு அனுப்பப்படும் பிரதியின் எந்தவொரு இடத்திலும் படைப்பாளியின் எந்தவொரு விபரங்களும் இடம்பெறலாகாது.

பிரதியைப் பற்றிய சுருக்கக் குறிப்பும்படைப்பாளியைப் பற்றிய சுய விபர விண்ணபமும் பிரத்தியேகமாக பிரதியுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.

போட்டிக்கு ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால்  போதுமானது.

இப்போட்டிக்கான நடுவர் தீர்மானமே இறுதியானது.

கையெழுத்துப்பிரதிகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ந் திகதிக்குள் கீழ் காணும் விலாசத்திற்கு தபால் மூலமாகவோநேரடியாகவோ கையளிக்கப்படல் வேண்டும்.

 எஸ். கொடகே சகோதரர்கள் பிரைவட் லிமிடட்
661, 665, 675, மருதானை வீதி,
கொழும்பு-10.


மேலதிக விபரங்களுக்கு -   0778681464-  0776578605

29.05.2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக