வியாழன், 26 ஏப்ரல், 2018

நாங்கள் இனி என்னதான் செய்வோம்? தீர்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

பதவிகளிலிருந்து விலகிய 16 பேரும் மஹிந்தவிடம் கோரிக்கை

அரச பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்துகொண்ட 16 பேரும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.


இந்தச் சந்திப்பின்போது, எதிர்காலத்தில் அரசியலில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலுக்காக நேரம் ஒதுக்கித்தருமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரீ.பீ. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக