வியாழன், 26 ஏப்ரல், 2018

“நடனத்திலகம்” அரச உயர் விருது பெறும் திருமதி வசந்தி குஞ்சிதபாதம்

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம், அரச நடன மற்றும் நாட்டிய நாடக ஆலோனைக் குழு ஒன்றிணைந்து வருடா வருடம் ஏற்பாடு செய்கின்ற அரச நடன விருது விழா 2018 இன் போது “நடனத்திலகம்” அரச உயர் விருது வழங்குவதற்காக இவ்வாண்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நடன ஆசிரியர் திருமதி வசந்தி குஞ்சிதபாதம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் நடனத்துறைக்கு ஆற்றிய உன்னத சேவையினை கௌரவித்து நடனக் கலைஞர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் இவ்விருதானது, நடனத்துறையில் இவர் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தமைக்காக கௌரவப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

இவ்விருது வழங்கல் வைபவம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் எதிர்வரும் 2018 மே மாதம் 04 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு, கொழும்பு-07, நெளும் பொக்குண கலையரங்கில்   நடைபெறவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக